தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாஸ்டர் ஆப் பார்மசி படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று தமிழகத்தில் செயல்படும் அரசு கல்லூரிகளில் உள்ள எம்.பார்ம்., இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பார்ம்., இடங்கள் ஆகியவற்றிற்கு இதன் மூலம் சேர்க்கை பெறலாம்.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பி.பார்ம் படித்திருக்க வேண்டும்.
இடஒதுக்கீடு: பொது பிரிவினருககு 31 சதவீதம், பி.சி., பிரிவினருக்கு 30 சதவீதம், எம்.பி.சி., பிரிவினருக்கு 20 சதவீதம், எஸ்.சி., பிரிவினருக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு உண்டு.
சேர்க்கை முறை: ஆன்லைன் நுழைவுத்தேர்வு மற்றும் ஆன்லைன் கவுன்சிலிங் வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 10
விபரங்களுக்கு: https://tnhealth.tn.gov.in/ மற்றும் https://tnmedicalselection.net/