பெண் கல்விக்கு உதவித்தொகை | Kalvimalar - News

பெண் கல்விக்கு உதவித்தொகை

எழுத்தின் அளவு :

பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், இந்திரா காந்தி உதவித்தொகை திட்டத்தின் கீழ் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.




தகுதிகள்: 


* குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தையாக இருத்தல் வேண்டும்.


* நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பின் முதலாம் ஆண்டில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.


* 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும். 


* முழுநேர படிப்பில் மட்டுமே சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். 



மொத்த உதவித்தொகை எண்ணிக்கை: 3,000



உதவித்தொகை விபரம்: ஆண்டுக்கு 36 ஆயிரத்து 200 ரூபாய். இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே. வேறு எந்த கூடுதல் மானியமும் இல்லை.



விண்ணப்பிக்கும் முறை: தேசிய உதவித்தொகை இணையதளம் வாயிலாக உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 



விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30



விபரங்களுக்கு: https://scholarships.gov.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us