யு.கே., காம்ன்வெல்த் உதவித்தொகை | Kalvimalar - News

யு.கே., காம்ன்வெல்த் உதவித்தொகை

எழுத்தின் அளவு :

யு.கே.வில் உள்ள கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்புகளை படிக்க, 2022ம் ஆண்டிற்கான காமன்வெல்த் மாஸ்டர்ஸ் ஸ்காலர்ஷிப் திட்டத்தை காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன் - சி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
வழங்கப்படும் பிரிவுகள்:


* வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்  


* சுகாதார அமைப்புகள் மற்றும் திறனை வலுப்படுத்துதல்


* உலகளவில் வளர்ச்சியை ஊக்குவித்தல்


* உலகளாவிய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல்


* நெகிழ்ச்சியை வலுப்படுத்துதல் மற்றும் நெருக்கடிகளுக்கு பதிலளித்தல்


* அணுகல், சேர்த்தல் மற்றும் வாய்ப்பு
ஆகிய கருப்பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான முதுநிலைப் பட்டப்படிப்புகளை படிக்க விரும்பும் மற்றும் கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தகுதிகள்:


* இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.


* யு.கே., கல்வி நிறுவனங்களில் 2022 செப்டம்பர் அல்லது அக்டோபரில் துவங்கும் படிப்புகளில் மாணவர் சேர்க்கை பெற வேண்டும்.


* இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


* இரண்டாவது முதுநிலை பட்டப்படிப்பிற்கு நிபந்தனையில் அடிப்படையிலேயே உதவித்தொகை வழங்கப்படும்.


* எம்.பி.ஏ., படிப்பிற்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட மாட்டது.
விண்ணப்பிக்கும் முறை:


காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷனின் ஆன்லைன் அப்ளிகேஷன் முறை வாயிலாகவோ அல்லது இந்திய கல்வி அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட சாக்‌ஷத் இணையதளம் வாயிலாகவோ ஆன்லைனில் மட்டுமே வேண்டும். 
விண்ணப்பிக்க கடைசி நாள்:


காமன்வெல்த கமிஷன் இணையதளம் - நவம்பர் 1


சாக்‌ஷத் இணையதளம்- டிசம்பர் 7
விபரங்களுக்கு: 


சாக்‌ஷத் இணையதளம் -http://proposal.sakshat.ac.in/scholarship/


காமன்வெல்த கமிஷன் இணையதளம் - 


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us