பி.விஎஸ்.சி., பி.டெக்., அட்மிஷன் | Kalvimalar - News

பி.விஎஸ்.சி., பி.டெக்., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வழங்கும் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.



கால்நடை மருத்துவம் மற்றும் உணவு அறிவியலில் சர்வதேச தரத்திலான கல்வி, மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நோக்கில் 1989ம் ஆண்டு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது. 



9 கல்லூரிகள், 12 ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையங்கள், 15 ஆராய்ச்சி ஆய்வகங்கள், 20 பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், 3 விவசாயிகளுக்கான பயிற்சி மையங்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.



படிப்புகள்:



பி.விஎஸ்சி., அண்ட் ஏ.ச்., - கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு 



கால அளவு: ஓர் ஆண்டு உள்ளிருப்பு பயிற்சி உட்பட 5 ஆண்டுகள் 6 மாதங்கள். 



கல்லூரிகள் மற்றும் மொத்த மாணவர் சேர்க்கை இடங்கள்:



* சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி - 120 இடங்கள்


* கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல் - 80 இடங்கள்


* கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருநெல்வேலி - 80 இடங்கள்


* கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஒரத்தநாடு - 80 இடங்கள்


* கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சேலம் - 40 இடங்கள்


* கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தேனி - 40 இடங்கள்


* கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், உடுமலைப்பேட்டை- 40 இடங்கள்




தொழில்நுட்ப படிப்புகள்: 



பி.டெக்., - உணவு தொழில்நுட்பம் - 4 ஆண்டுகள்


* உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை -40 இடங்கள்



பி.டெக்., - கோழியின தொழில்நுட்பம் - 4 ஆண்டுகள்.


* கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி, ஓசூர் - 40 இடங்கள்



பி.டெக்., - பால்வளத் தொழில்நுட்பம் - 4 ஆண்டுகள்


* உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லுரி, சென்னை - 20 இடங்கள்



கல்வித் தகுதி: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.



விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 8



விபரங்களுக்கு: www2.tanuvas.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us