ராணுவ கல்லூரியில் அட்மிஷன் | Kalvimalar - News

ராணுவ கல்லூரியில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் செயல்படும் இந்திய ராணுவ கல்லூரியில் 2022ம் கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த ராணுவ கல்லூரியில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.



படிப்பு: எட்டாம் வகுப்பு



கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள். 



வயது வரம்பு: 11.5 வயதிலிருந்து 13 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது, 2009 ஜூலை 2ம் தேதிக்கு முன்பாகவோ, 2011 ஜனவரி முதல் தேதிக்கு பிறகோ பிறந்தவராக இருக்கக்கூடாது.



தேர்வு செய்யப்படும் முறை: ராணுவ கல்லூரி நடத்தும் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டு அதில் தகுதி பெறும் மாணவர்கள் ராணுவ கல்லூரியில் சேர்க்கை பெறவர். 



நுழைவுத் தேர்வு: கணிதம் - 125 மதிப்பெண், பொது அறிவு - 200 மதிப்பெண், ஆங்கிலம் - 75 மதிப்பெண் ஆகிய பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தது 50 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும். 



நேர்முகத்தேர்வு: நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மட்டுமே நேர்முகத்தேர்வு நடைபெறும். 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இதில், மாணவரின் அறிவுக்கூர்மை, தனித்தன்மை மற்றும் தொடர்பியல் திறன் ஆகியவை பரிசோதிக்கப்படும். அதிலும் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். 



உதவித்தொகை: சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு அவர்கள் சார்ந்த மாநிலத்தைப் பொறுத்து, ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 30



நுழைவுத்தேர்வு நாள்: டிசம்பர் 18



விபரங்களுக்கு: http://www.rimc.gov.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us