ஐ.ஐ.டி.,யின் ஆன்லைன் படிப்பு | Kalvimalar - News

ஐ.ஐ.டி.,யின் ஆன்லைன் படிப்பு

எழுத்தின் அளவு :

சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில், ஆன்லைன் பி.எஸ்சி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


படிப்பு நிலைகள்:

பவுண்டேஷனல் சர்ட்டிபிகேட்

டிப்ளமா இன் புரொகிராமிங்

டிபளமா இன் டேட்டா சயின்ஸ்

பி.எஸ்சி., இன் புரொகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ்


மாணவர்கள் நிறைவு செய்வதற்கு ஏற்ப, சான்றிதழ் அல்லது டிப்ளமா அல்லது இளநிலை பட்டம் வழங்கப்படுகிறது. அனைத்து நிலைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு பி.எஸ்சி., பட்டம் வழங்கப்படுகிறது.


மொத்த கால அளவு: 3 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை.


சேர்க்கை நிலைகள்:

ரெகுலர் என்ட்ரி மற்றும் டிப்ளமா என்ட்ரி என இரண்டு முறைகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ரெகுலர் என்ட்ரி முறையில் சேர்க்கை பெறுபவர்கள், படிப்படியாக புவுண்டேஷன், டிப்ளமா நிலைகளை நிறைவு செய்து இறுதியாக பி.எஸ்சி., பட்டத்தை பெறலாம். டிப்ளமா என்ட்ரி முறையில் சேர்க்கை பெறுபவர்கள் டிப்ளமா பட்டத்தை மட்டுமே பெற முடியும். வேலைக்கு செல்பவர்கள் மற்றும் அடிப்படைகளை அறிந்தவர்களுக்காக டிப்ளமா படிப்பு வழங்கப்படுகிறது.


விண்ணப்பிக்க தகுதி:

10ம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலத்தை படித்திருக்க வேண்டும். மூன்றாண்டு டிப்ளமா படிப்பு அல்லது 12ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும், தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இந்த படிப்பை இரண்டாம் பட்டமாக தொடரலாம். பட்டதாரிகள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் சேர்க்கை பெறலாம். உச்ச வயது வரம்பு இல்லை.


விண்ணப்பிக்கும் முறை

குவாலிபயர் 1, பவுண்டேஷன், குவாலிபயர் 2 மற்றும் குவாலிபயர் 3 ஆகிய தேர்வுகள் வாயிலாக, தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவற்றிற்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் மாறுபடும். தகுதியானவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 30


விபரங்களுக்கு: www.onlinedegree.iitm.ac.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us