எல்எல்.பி., அட்மிஷன் | Kalvimalar - News

எல்எல்.பி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 14 அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் ஒரு தனியார் கல்லூரிகளில் சட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


படிப்பு: 

பி.ஏ.எல்எல்.பி., -ஹானர்ஸ் - 5 ஆண்டுகள்

பி.காம்.எல்எல்.பி.,  - ஹானர்ஸ் - 5 ஆண்டுகள்

பி.பி.ஏ.எல்எல்.பி., - ஹானர்ஸ் - 5 ஆண்டுகள்

பி.சி.ஏ.எல்எல்.பி., - ஹானர்ஸ் - 5 ஆண்டுகள்

பி.ஏ.எல்எல்.பி., - 5 ஆண்டுகள்


ஒருங்கிணைக்கப்பட்ட இந்த சட்டப்படிப்பிற்கு இடையே மாணவர்களுக்கு தனி பட்டம் எதுவும் வழங்கப்படாது.


கல்வி நிறுவனங்கள்:

சென்னையில் உள்ள சட்ட பல்கலை வளாகத்தில் செயல்படும் சீர்மிகு சட்ட கல்லூரி, அதன் இணைப்பு பெற்ற சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி - புதுப்பாக்கம் மற்றும் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தேனி ஆகிய நகரங்களில் செயல்படும் அரசு சட்டக்கல்லூரிகள். மேலும் திண்டிவனத்தில் உள்ள சரஸ்வதி சட்டக்கல்லூரி எனும் தனியார் கல்லூரி.


மொத்த மாணவர் சேர்க்கை இடங்கள்: 1651


தகுதிகள்: ஹானர்ஸ் சட்டப்படிப்புகளுக்கு மேல்நிலைப் பள்ளி படிப்பில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.


இதர எல்எல்.பி., படிப்பில் சேர்க்கை பெற மேல்நிலைப்பள்ளி படிப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது வரம்பு இல்லை.


தேர்வு செய்யப்படும் முறை: மேல்நிலைப்பள்ளி படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலும், இன வாரியான இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு இட ஒதுக்கீடு அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


விபரங்களுக்கு: 

தொலைபேசி எண்கள்: 044 - 2464 1919 மற்றும் 2495 7414 

இணையதள முகவரி: www.tndalu.ac.in 


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us