பாரதியார் பல்கலையில் அட்மிஷன் | Kalvimalar - News

பாரதியார் பல்கலையில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை டிப்ளமா படிப்புகள், இளநிலை பட்டப்படிப்புகள், டிப்ளமா படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


வழங்கப்படும் படிப்புகள் 


முதுநிலை பட்டப்படிப்புகள்:

எம்.எஸ்சி., - மேத்மெடிக்ஸ், மேத்மெடிக்ஸ் வித் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், ஸ்டேடிஸ்டிக்ஸ், பிசிக்ஸ், மெடிக்கல் பிசிக்ஸ், நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன், கெமிஸ்ட்ரி, பயோஇன்பர்மெடிக்ஸ், என்விரான்மெண்டல் சயின்சஸ், பயோடெக்னாலஜி, மெடிக்கல் பயோடெக்னாலஜி, மைக்ரோபயோலஜி, பயோகெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, டேட்டா அனலடிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, இ-லேர்னிங் டெக்னாலஜி, அப்ளைடு சைக்காலஜி, எம்.காம்., எம்.சி.ஏ., எம்.எட்., எம்.பி.எட்., எம்.ஏ., எம்.எஸ்.டபிள்யூ, உட்பட பல்வேறு படிப்புகள்.


இளநிலை பட்டப்படிப்புகள்:

பி.வொக்., - பிசினஸ் பிராசஸ் அண்ட் டேட்டா அனலடிக்ஸ்

பி.வொக்., - மல்ட்டிமீடியா அண்ட் அனிமேஷன்


பி.ஜி., டிப்ளமா மற்றும் டிப்ளமா படிப்புகள்:

கைடன்ஸ் அண்ட் கவுன்சிலிங் இன் எஜுகேஷன், எஜுகேஷனல் அட்மினிஸ்ட்ரேஷன், வுமன் என்ட்ர்பிரனர்ஷிப், கேரியர் கைடன்ஸ் பார் எக்சிகியூட்டிவ்ஸ், ரிமோட் சென்சிங், ஆக்குபேஷனல் ஹெல்த் அண்ட் இண்டஸ்ட்ரியல் சேப்டி, ஹெர்பல் டெக்னாலஜி ஆகியவற்றில் முதுநிலை டிப்ளமா படிப்புகளும், சைபர் செக்யூரிட்டி அண்ட் டிஜிட்டல் பார்ன்சிக்ஸ் பிரிவில் டிப்ளமா படிப்பும் வழங்கப்படுகிறது.


சான்றிதழ் படிப்புகள்:

ஆக்மெண்டெடு ரியாலிட்டி, சைபர் செக்யூரிட்டி, இன்டர்நெட் ஆப் திங்ஸ், ஜெர்மன் லேங்குவேஜ், ஸ்போக்கன் இங்கிலிஷ், டிஜிட்டல் மார்க்கெட்டிங், பிசினஸ் அனலட்டிக்ஸ், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் பிளாக் செயின் இன் பினான்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் அனலடிக்ஸ்.


தகுதி: படிப்புகளுக்கு ஏற்ப தகுதிகள் மாறுபடும். எம்.பி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., மெடிக்கல் பயோடெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 31


விபரங்களுக்கு: https://b-u.ac.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us