அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் வழங்கும் பல்வேறு இன்ஜினியரிங் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
படிப்புகள்: ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், ஆட்டோமேஷன் அண்ட் ரொபாட்டிக்ஸ் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்.
தேர்வு விபரம்: இந்த ஆண்டில் இதுவரை அம்ரிதா என்ட்ரன்ஸ் எக்ஷாமினேசன் - இன்ஜினியரிங் எனும் இத்தேர்வை எழுதாத மாணவர்கள் மட்டும் இறுதிக்கட்ட தேர்வை எழுத தகுதி பெறுகின்றனர். இதுவரை, ஏ.இ.இ.இ., தேர்வுகளை பல முறை எழுதிய மாணவர்களின் சிறந்த மதிப்பெண் நார்மலைசேஷன் முறையில் கணக்கிடப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 28
தேர்வு நாள்: ஆகஸ்ட் 3
விபரங்களுக்கு: www.amrita.edu/btech