ஜி.ஏ.டி.,-பி / பி.இ.டி., | Kalvimalar - News

ஜி.ஏ.டி.,-பி / பி.இ.டி.,

எழுத்தின் அளவு :

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பயோடெக்னாலஜி துறை சார்பாக என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை, பயோடெக்னாலஜி சார்ந்த முக்கிய தேர்வுகளை நடத்துகிறது. 


தேர்வுகள்

ஜி.ஏ.டி- பி என்று சுருக்கமாக அழைக்கப்படும் கிராஜூவேட் ஆப்டிடியுட் டெஸ்ட் - பயோடெக்னாலஜி மற்றும் பி.இ.டி., எனும் பயோடெக்னாலஜி எலிஜிபிலிட்டி டெஸ்ட் ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


முக்கியத்துவம்

ஜி.ஏ.டி- பி எனும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு அடிப்படையில், பயோடெக்னாலஜி துறையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் எம்.எஸ்சி., - பயோடெக்னாலஜி மற்றும் சார்ந்த படிப்புகள்; எம்.டெக்.,- பயோடெக்னாலஜி  மற்றும் சார்ந்த படிப்புகள்; எம்.எஸ்சி., -அக்ரிகல்ச்சுரல் பயோடெக்னாலஜி மற்றும் எம்.வி.எஸ்சி.,-அனிமல் பயோடெக்னாலஜி ஆகிய முதுநிலை பயோடெக்னாலஜி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இத்துறையில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் டி.பி.டி.,- ஜே.ஆர்.எப்., எனும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்பிற்கும், பிஎச்.டி., படிப்பிற்கும் தகுதியானவர்கள், பி.இ.டி., தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.


தேர்வு முறை

ஒரு மாணவர், அவர் விருப்பப்படி இரண்டில் ஏதேனும் ஒரு தேர்விற்கும் அல்லது இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். முற்றிலும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைன் வாயிலாகவே இரண்டு தேர்வுகளும் நடைபெறும். 


தேர்வு நேரம்: தலா 3 மணி நேரங்கள்


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 31


குறிப்பு: ஆகஸ்ட் 4 முதல் 6ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாகவே திருத்தங்களை மேற்கொள்ளலாம். 


தேர்வுகள் நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 14


தேர்வு நேரம்: 

ஜி.ஏ.டி.,-பி : காலை 9 - 12 மணி வரை

பி.இ.டி.,: பிற்பகல் 3 - 6 மணி வரை


விபரங்களுக்கு: https://nta.ac.in/ மற்றும் http://dbt.nta.ac.in/


தொலைபேசி: 011-40759000


இ-மெயில்: dbt@nta.ac.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us