ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., அட்மிஷன் | Kalvimalar - News

ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

இந்திய அரசின் கீழ் தன்னாட்சி அங்கீகாரத்துடன் செயல்படும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜூகேஷன் அண்ட் ரீசர்ச் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அறிவியல் ஆராய்ச்சிகளில் அதிகளவில் ஈடுபட்டு சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண மாணவர்களை தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இக்கல்வி நிறுவனத்தின் வளாகங்கள், பெர்காம்பூர், போபால், கொல்கத்தா, மொகாலி, புனே, திருவனந்தபுரம் மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் உள்ளன.வழங்கப்படும் படிப்புகள்பி.எஸ்.எம்.எஸ்., (டியூல் டிகிரி) - 5 ஆண்டுகள்பிரிவுகள்


* பயோலஜிக்கல் சயின்சஸ்


* கெமிக்கல் சயின்சஸ்


* எர்த் அண்டு கிளைமேட் சயின்சஸ் / எர்த் அண்டு என்விரான்மெண்டல் சயின்சஸ்


* இன்ஜினியரிங் சயின்சஸ் - கெமிக்கல் இன்ஜினியரிங், டேட்டா சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ்


* ஜியாலஜிக்கல் சயின்சஸ்


* இன்டக்ரேட்டர்டு அண்டு இன்டர்டிசிப்ளினரி சயின்சஸ் - பயோலஜிக்கல் சயின்சஸ், கெமிக்கல் சயின்சஸ், டேட்டா சயின்சஸ், மேத்மெடிக்கல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ்


* மேத்மெடிக்கல் சயின்சஸ்


* பிசிக்கல் சயின்சஸ்
மாணவர் சேர்க்கை இடங்கள்:


ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., பெர்காம்பூர் - 256 இடங்கள்


ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., போபால் - 252 இடங்கள்


ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., கொல்கத்தா - 246 இடங்கள்


ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., மொகாலி - 244 இடங்கள்


ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., புனே - 288 இடங்கள்


ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., திருவனந்தபுரம் - 280 இடங்கள்


ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., திருப்பதி - 181 இடங்கள்பி.எஸ்., - 4 ஆண்டுகள்


ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., போபால் - 115 இடங்கள் (பி.எஸ்., இன்ஜினியரிங் சயின்சஸ்  - 73 இடங்கள் மற்றும் பி.எஸ்.,  எக்னாமிக் சயின்சஸ் - 42 இடங்கள்)10 செமஸ்டர்கள் கொண்ட பி.எஸ் - எம்.எஸ்., படிப்பில், முதல் இரண்டு ஆண்டில், அறிவியல் பாடப்பிரிவில் உள்ள அடிப்படை அறிவியல் நுணுக்கங்கள் கற்று தரப்படுகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டில், அறிவியல் துறையில் உள்ள ஏதேனும் ஒரு பாடப்பிரிவை முதன்மை படிப்பாக தேர்வு செய்து மாணவர்கள் படிக்கலாம். ஐந்தாம் ஆண்டு முழுவதும் முழுநேர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.அடிப்படைத் தகுதி


பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக பயின்று குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சேர்க்கை முறை


மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் நடத்தப்படும் கே.வி.பி.ஒய்., என்ற தேசிய அறிவியல் உதவித்தொகை தகுதி தேர்வில் தேர்ச்சி அல்லது மத்திய / மாநில கல்வி வாரியத்தின் கீழ் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., ஆப்டிடியூட் டெஸ்ட் தேர்வு செப்டம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது; ஜே.இ.இ., தேர்வு தேதி முடிவு செய்யப்படவில்லை.கே.வி.பி.ஒய்., மற்றும் எஸ்.சி.பி., அடிப்படையில் விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 21விபரங்களுக்கு: www.iiseradmission.inAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us