வணிகப் படிப்புகள் | Kalvimalar - News

வணிகப் படிப்புகள்

எழுத்தின் அளவு :

வெளிநாட்டு வணிகம் சார்ந்த கல்வியை வழங்கும் நோக்கில் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட கல்வி நிறுவனமான ‘இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் பாரின் டிரேட்’-ல் மேலாண்மை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. வங்கியுள்ளது.


புதுடில்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் செயல்படும் இக்கல்வி நிறுவனம், இதுவரை 30 நாடுகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் அதிபர்களுக்கு மேலாண்மை சார்ந்த கல்வியை வழங்குகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


படிப்புகள்: 

பிஎச்.டி., - மேனேஜ்மெண்ட் புரொகிராம் 

மார்க்கெட்டிங், ஜெனரல் மேனேஜ்மெண்ட் அண்ட் ஸ்ட்ரேட்டஜி, பினான்ஸ், ஆப்ரேஷன்ஸ் அண்ட் சப்ளை சயின் மேனேஜ்மெண்ட் மற்றும் ஐ.டி. இன்னோவேஷன் அண்ட் டெக்னாலஜி மேனேஜ்மெண்ட் ஆகிய பிரிவுகளில் பகுதி மற்றும் முழு நேர படிப்பாக வழங்கப்படுகிறது. 


தகுதிகள்: உரிய பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


எம்.பி.ஏ., - இன்டர்நேஷனல் பிசினஸ் 


தகுதிகள்: வார இறுதிநாட்களில் வழங்கப்படும் இப்படிப்பில் சேர்க்கை பெற இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. மேலும், குறைந்தது 3 ஆண்டுகள் மேலாண்மை சார்ந்த துறையில் பணி அனுப்வம் பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


சர்ட்டிபிகேட் புரொகிராம் இன் எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட் மேனெஜ்மெண்ட்  முற்றிலும் ஆன்லைன் வாயிலாக வழங்கப்படும் இப்படிப்பில் இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், இன்டர்நேஷனல் டிரேட் ஆப்ரேஷன்ஸ் அண்ட் டாக்குமெண்டேஷன், பாரின் டிரேட் அண்ட் பாலிசி, இன்டர்நேஷனல் டிரேட் பினான்ஸ், கஸ்டம் ரெகுலேஷன்ஸ் அண்ட் இம்போர்ட் புரொசீஜர்ஸ் ஆப் இந்தியா மறும் இன்டர்நேஷனல் டிரேட் லாஜிஸ்டிக்ஸ் ஆகியவை கற்றுத்தரப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை:

ஐ.ஐ.எப்.டி., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 

பிஎச்.டி., - ஜூன் 30

எம்.பி.ஏ., - ஜூலை 31

சான்றிதழ் படிப்பு - ஆகஸ்ட் 15


விபரங்களுக்கு: www.iift.edu


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us