ஏ.சி.எஸ்.ஐ.ஆர்., | Kalvimalar - News

ஏ.சி.எஸ்.ஐ.ஆர்.,

எழுத்தின் அளவு :

புத்தாக்க ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதோடு, அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் துறையில் சிறப்பான கல்வியை வழங்குவதற்காக மத்திய அரசால் உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நிறுவப்பட்ட கல்வி நிறுவனமே, ஏ.சி.எஸ்.ஐ.ஆர்., எனும் அகாடமி ஆப் சயின்டிபிக் அண்ட் இன்னோவேடிவ் ரிசர்ச்!




முக்கியத்துவம்:


2010ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட தனி சட்டத்தின் கீழ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக ஏ.சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவப்பட்டது. உயர்தர ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் 37 ஆய்வகங்கள், 5 இணை கல்வி நிறுவனங்கள், 6 சி.எஸ்.ஐ.ஆர்., மையங்களுடனும், தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்தும் பல்வேறு படிப்புகளை ஏ.சி.எஸ்.ஐ.ஆர்., வழங்குகிறது. 



இயற்கை அறிவியல், உயிர் அறிவியல், கணிதம் மற்றும் கணக்கீட்டு அறிவியல், மருத்துவம், பொறியியல் ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சி வசதிகளை வழங்குவது, புதுமையான அறிவியல் சிந்தனைகளை ஊக்குவிப்பது, தொழில்நுட்ப ரீதியான கற்றல் திறனை மேம்படுத்துவது, தேசிய மற்றும் அயல்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து அறிவியல் தொழில்நுட்ப வசதிகளை உயர்த்துவது, துறை சார்ந்த பயிற்சிகளையும், ஆராய்ச்சிகளையும் முறைப்படுத்துவது ஆகியவற்றை பிரதான நோக்கங்களாக கொண்டு செயல்படும் இந்நிறுவனத்திற்கு, சயின்டிபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் ஆர்கனைசேஷன் (எச்.ஐ.ஆர்.ஓ.,) என்கிற அங்கீகாரமும் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.



படிப்புகள்:


* பிஎச்.டி., இன் இன்ஜினியரிங்


* இண்டக்ரேட்டட் டூயல் டிகிரி பிஎச்.டி., புரோகிராம் இன் இன்ஜினியரிங்


* பிஎச்.டி., இன் சயின்ஸ்


* எம்.டெக்.,


* இண்டக்ரேட்டட் எம்.எஸ்சி., பிஎச்.டி., இன் நியூட்ரீஷனல் பயாலஜி


* எம்.எஸ்சி., இன் புட் டெக்னாலஜி


* இண்டக்ரேட்டட் எம்.எஸ்சி., பிஎச்.டி., இன் கிளினிக்கல் ரிசர்ச்


* இண்டக்ரேட்டட் எம்.எஸ்சி., பிஎச்.டி., இன் ஹெல்த் இன்பர்மெடிக்ஸ்


* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா புரோகிராம்ஸ் (ரோபடிக்ஸ், மானுபாக்ச்சரிங் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் மெய்ன்டனன்ஸ்)



சேர்க்கை முறை:


ஆண்டிற்கு இரு முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. தற்போது, எம்.டெக்., எம்.எஸ்சி., பிஎச்.டி.,-சயின்சஸ், பிஎச்.டி.,-இன்ஜினியரிங் மற்றும் ஐ.டி.டி.பி.,-இன்டெக்ரேட்டர்டு டியூல் டிகிரி புரொகிராம் இன் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஏ.சி.எஸ்.ஐ.ஆர்., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 



விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31 



விபரங்களுக்கு: http://acsir.res.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us