ஏ.ஐ.ஐ.எஸ்.எச்., அட்மிஷன் | Kalvimalar - News

ஏ.ஐ.ஐ.எஸ்.எச்., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

வாய்பேச இயலாதோர் மற்றும் காதுகேளாதோர் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பல்வேறு படிப்புகளை வழங்குவதற்காக மத்திய அரசால், மைசூரில் ஏற்படுத்தப்பட்ட பிரத்யேக கல்வி நிறுவனமான, ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பீச் அண்ட் ஹியரிங், மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



வழங்கப்படும் படிப்புகள்:



டிப்ளமா இன் ஹியரிங் எய்டு அண்ட் இயர் மோல்டு டெக்னாலஜி


டிப்ளமா இன் எர்லி சைல்டுஹுட் ஸ்பெஷல் எஜுகேஷன்


டிப்ளமா இன் ஹியரிங் லேங்குவேஜ் அண்ட் ஸ்பீச்


பாச்சுலர் ஆப் ஆடியாலஜி அண்ட் ஸ்பீச் லாங்குவேஜ் பெத்தாலஜி (பி.ஏஎஸ்எல்பி.,)


பாச்சுலர் ஆப் எஜுகேஷன் - ஸ்பெஷல் எஜுகேஷன் (ஹியரிங் இம்பயர்மென்ட்)


பி.ஜி. டிப்ளமா இன் ஆக்மென்டேடிவ் அண்ட் ஆல்டர்நேட்டிவ் கம்யூனிகேஷன்


பி.ஜி. டிப்ளமா இன் நியூரோ - ஆடியோலஜி


பி.ஜி. டிப்ளமா இன் கிளினிக்கல் லிங்குஷ்டிக்ஸ் பார் ஸ்பீச் அண்ட் லேங்குவேஜ் பெத்தலாஜிஸ்ட்ஸ்


பி.ஜி. டிப்ளமா இன் பாரின்ஷிக் ஸ்பீச் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி


பி.ஜி. டிப்ளமா இன் ஆடிட்டரி வெர்பல் தெரபி


எம்.எஸ்சி., - ஆடியாலஜி


எம்.எஸ்சி.,- ஸ்பீச் அண்ட் லாங்குவேஜ் பெத்தாலஜி


மாஸ்டர் ஆப் எஜுகேஷன் - ஸ்பெஷல் எஜுகேஷன் (ஹியரிங் இம்பயர்மெண்ட்)


பிஎச்.டி., மற்றும் போஸ்ட் டாக்டோரல் பெல்லோஷிப் (பி.டி.எப்.,)



தகுதிகள்: படிப்பிற்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.



தேர்வு செய்யப்படும் முறை: ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பீச் அண்ட் ஹியரிங் நடத்தும் நுழைவுத்தேர்வு வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.



நுழைவுத்தேர்வு மையங்கள்: அகமதாபாத், போபால், சண்டிகர், கோழிக்கோடு, சென்னை, புதுடில்லி, குவகாத்தி, ஹூப்ளி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, மைசூர், பாட்னா மற்றும் திரிசூர் ஆகிய நகரங்களில் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.



விண்ணப்பிக்கும் முறை: கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 10



விபரங்களுக்கு: https://aiishmysore.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us