ஐ.எஸ்.ஐ., | Kalvimalar - News

ஐ.எஸ்.ஐ.,

எழுத்தின் அளவு :

புள்ளியியல் படிப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட ஐ.எஸ்.ஐ., எனப்படும் ‘இந்தியன் ஸ்டேடிஸ்டிக்கல் இன்ஸ்டிடியூட்’, மத்திய அரசின் கீழ் செயல்படும் முக்கிய கல்வி நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கது!


முக்கியத்துவம்:

கடந்த 1931ம் ஆண்டு துவங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம், 1959ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட இந்திய புள்ளியியல் கல்வி நிறுவன சட்டத்தின்கீழ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. இக்கல்வி நிறுவனம், புள்ளியியல் படிப்புகளுக்கு மட்டுமின்றி, கணிதம், குவாண்டிடேட்டிவ் எக்னாமிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இதர புள்ளியியல் சார்ந்த படிப்புகளை வழங்குவதிலும் புகழ்பெற்றது. 


பயிற்சி மையங்கள்: 

கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டுள்ள இக்கல்வி நிறுவனம், பெங்களூரு, புதுடில்லி, சென்னை மற்றும் தேஷ்பூர் ஆகிய இடங்களில் பயிற்சி மையங்களைக் கொண்டுள்ளது. மேலும், ஜார்கண்ட்டில் ஒரு கிளையையும் கொண்டுள்ளது.

 

இளநிலை பட்டப்படிப்புகள்:

* பேச்சுலர் ஆப் ஸ்டேடிஸ்டிக்ஸ் (பி.ஸ்டாட்.,) 

* பேச்சுலர் ஆப் மேத்மெடிக்ஸ் (பி.மேத்.,) 


முதுநிலை படிப்புகள்:

* மாஸ்டர் ஆப் ஸ்டேடிஸ்டிக்ஸ் (எம்.ஸ்டாட்.,) 

* மாஸ்டர் ஆப் மேத்மெடிக்ஸ் (எம்.மேத்.,) 

* எம்.எஸ்., இன் குவாண்டிடேடிவ் எக்னாமிக்ஸ் (எம்.எஸ்.கியூ.இ.,), 

* எம்.எஸ்., இன் குவாலிட்டி மேனேஜ்மெண்ட் சயின்ஸ் (எம்.எஸ்.,கியூ.எம்.எஸ்.,) 

* எம்.எஸ்., இன் லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ் (எம்.எஸ்.எல்.ஐ.எஸ்.,) 

* எம்.டெக்., இன் கம்பியூட்டர் சயின்ஸ் (எம்.டெக்.சி.எஸ்.,), 

* எம்.டெக்., இன் கிரிப்டாலஜி அண்ட் செக்யூரிட்டி (எம்.டெக்.சிஆர்.எஸ்.,) 

* எம்.டெக்., இன் குவாலிட்டி, ரிலயப்லிட்டி அண்ட் ஆபரேஷன்ஸ் ரிசர்ச் (எம்.டெக்.கியூ.ஆர்.ஓ.ஆர்.,) 

* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் பிசினஸ் அனலட்டிக்ஸ் (பி.ஜி.டி.பி.ஏ.,) 

* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் அக்ரிகல்ச்சர் அண்ட் ரூரல் மெனேஜ்மெண்ட் வித் ஸ்டேடிஸ்டிக்கல் மெதட்ஸ் அண்ட் அனலடிக்ஸ் (பி.ஜி.டி.ஏ.ஆர்.எஸ்.சி.எம்.ஏ.,) 


ஆராய்ச்சி படிப்புகள்:

* ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப்

* பிஎச்.டி.,

* டி.எஸ்சி., 


உதவித்தொகை:

சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு படிப்பிற்கு ஏற்ப மாதம் 5 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.


தகுதிகள்:

இளநிலை பட்டப்படிப்பிற்கு 12ம் வகுப்பு முடித்தவராகவும், முதுநிலை மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கு துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:

ஐ.எஸ்.ஐ., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சேர்க்கை முறை:

நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் பெறும் மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.


விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 1


நுழைவுத் தேர்வு நாள்: ஜூலை 11 மற்றும் 18.


விபரங்களுக்கு: www.isical.ac.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us