சி.எம்.ஐ., | Kalvimalar - News

சி.எம்.ஐ.,

எழுத்தின் அளவு :

கணிதம் மற்றும் கணிதம் சார்ந்த படிப்புகளுக்கு தேசிய அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனம், சென்னை சிறுசேரியில் அமைந்துள்ள சென்னை மேத்மெடிக்கல் இன்ஸ்டிடியூட்.


முக்கியத்துவம்

1989ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இக்கல்வி நிறுவனம், 1996ம் ஆண்டு முதல் தன்னாட்சி அங்கீகாரமும், 2006ம் ஆண்டு பல்கலைக்கழக அங்கீகாரமும் பெற்றது. 


சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மேத்மெடிக்கல் சயின்சஸ் - ஐ.எம்.எஸ்சி., மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் - டி.ஐ.எப்.ஆர்., இந்தியன் ஸ்டேடிஸ்டிக்கல் இன்ஸ்டிடியூட் - ஐ.எஸ்.ஐ., சென்னை ஐ.ஐ.டி., புனேவில் உள்ள இன்டர் யுனிவர்சிட்டி பார் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோபிசிக்ஸ் - ஐ.யு.சி.ஏ.ஏ., உட்பட பல்வேறு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை சேர்ந்த பேராசிரியர்கள் சி.எம்.ஐ., கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளுக்கு விசிட்டிங் ஆசிரியர்களாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.


வழங்கப்படும் படிப்புகள்

பி.எஸ்சி., (ஹானர்ஸ்) - கணிதம் மற்றும் கணினி அறிவியல்  - 3 ஆண்டுகள் 

பி.எஸ்சி., (ஹானர்ஸ்) - கணிதம் மற்றும் இயற்பியல் - 3 ஆண்டுகள்

எம்.எஸ்சி., - கணிதம்

எம்.எஸ்சி., - கணினி அறிவியல்

எம்.எஸ்சி., - தரவு அறிவியல்

பிஎச்.டி., - கணிதம்

பிஎச்.டி., - கணினி அறிவியல்

பிஎச்.டி., - இயற்பியல் 


தகுதிகள்: 

பி.எஸ்சி., படிப்புகளுக்கு 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.எஸ்சி., படிப்புகளில் சேர உரிய பிரிவில் இளநிலை பட்டப்படிப்பும், பிஎச்.டி., படிப்புகளுக்கு உரிய துறையில் முதுநிலை பட்டப்படிப்பும் படித்திருக்க வேண்டும்.


மாணவர் சேர்க்கை முறை: 

பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஜாயின்ட் என்ட்ரன்ஸ் ஸ்கீரினிங் டெஸ்ட் - ஜெஸ்ட் தேர்வு வாயிலாகவும், பிற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிரத்யேக நுழைவுத்தேர்வு வாயிலாகவும் நடைபெறுகிறது. 


நுழைவுத் தேர்வு மையங்கள்: 

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பெங்களூரு, கொல்கத்தா, புதுடில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் உட்பட நாடு முழுவதிலும் 37 மையங்களில் நுழைவுத்  தேர்வு நடைபெறுகிறது.


உதவித்தொகை: 

தேர்வு செய்யப்படும் தகுதியுள்ள மாணவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். ஒவ்வொரு செமஸ்டரிலும் மாணவர்களின் கல்வி செயல்திறனைப் பொறுத்து, உதவித்தொகை தொடர்ந்து வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும். மொத்தம் 35 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.


விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31


நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 27


விபரங்களுக்கு: www.cmi.ac.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us