ஏ.ஐ., ஆராய்ச்சி உதவித்தொகை | Kalvimalar - News

ஏ.ஐ., ஆராய்ச்சி உதவித்தொகை

எழுத்தின் அளவு :

தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான ஒரு சிறந்த பல்துறை ஆராய்ச்சி கல்வி மையமாக விளங்கும், ராபர்ட் போஷ் சென்டர் பார் டேட்டா சயின்ஸ் அண்ட் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் (ஆர்.பி.சி.டி.எஸ்.ஏ.ஐ.,), ஐ.ஐ.டி., - சென்னை வளாகத்தில் செயல்படுகிறது.


முக்கியத்துவம்:


கடந்த 2017ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மையம், உற்பத்தி, உள்கட்டமைப்பு, ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்டுபிடிப்புகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. 


மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள், தொழில், மருத்துவத் துறை என பலவற்றோடு இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்தும் ராபர்ட் போஷ் மையம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - சென்னை, சமூகத்திற்கு அவசியம் தேவைப்படும் ’செயற்கை நுண்ணறிவு’ ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், நாராயணன் குடும்ப அறக்கட்டளை உடன் இணைந்து ஒரு உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


உதவித்தொகை விபரம்:


இந்த உதவித்தொகைக்கு தேர்வு பெற்ற பின் அவர்களின் அனுபவத்தைப் பொறுத்து ஆண்டுதோறும் 15 லட்சம் முதல் 18 லட்சம் வரை ( 20,000 முதல் 24,000 அமெரிக்க டாலர்கள்) வழங்கப்படும். இது ஐ.ஐ.டி.,யில் உதவி பேராசிரியரின் நுழைவு நிலை ஆண்டு சம்பளத்திற்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர, ஒரு முறை ஆராய்ச்சி மானியமாக 30 லட்சம் வரை வழங்கப்படுகிறது.


தகுதிகள்:


சமீபத்தில் பிஎச்.டி., முடித்த பட்டதாரிகள், கணினி அறிவியல், கணக்கீட்டு மற்றும் தரவு அறிவியல், உயிரியல் மருத்துவ அறிவியல், மேலாண்மை, நிதி மற்றும் பிற பொறியியல் துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்பவகள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


விபரங்களுக்கு: https://rbcdsai.iitm.ac.in/ 


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us