சுற்றுலா மேலாண்மை படிப்புகள் | Kalvimalar - News

சுற்றுலா மேலாண்மை படிப்புகள்

எழுத்தின் அளவு :

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின்படி நிறுவப்பட்ட, இந்திராகாந்தி நேஷனல் டிரைபல் யுனிவர்சிட்டி மற்றும் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மெண்ட்’ வழங்கும் இளநிலை மற்றும் முதுநிலை மேலாண்மை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கல்வி மையங்கள்: புபனேஷ்வர், குவாலியர், நொய்டா, கோவா மற்றும் நெல்லூர் ஆகிய நகரங்களில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மெண்ட் அமைந்துள்ளது.


இளநிலை பட்டப்படிப்பு: பி.பி.ஏ., - டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மெண்ட்

மொத்த இடங்கள்: 375


முதுநிலை பட்டப்படிப்பு: எம்.பி.ஏ., - டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மெண்ட்

மொத்த இடங்கள்: 750


தகுதிகள்:

இளநிலை படிப்பிற்கு 12ம் வகுப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. மேலும், ஐ.ஜி.என்.டி.யு., -ஐ.ஐ.டி.டி.எம்., நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். 


முதுநிலை பட்டப்படிப்பிற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. 


மேலும், மேட், கேட், சிமேட், எக்ஸாட், ஜிமேட், ஏ.டி.எம்.ஏ., ஆகிய தகுதித் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதியிருக்க வேண்டியது அவசியம். இந்த தேர்வுகளை எழுதாதவர்கள், மேலும், ஐ.ஜி.என்.டி.யு., -ஐ.ஐ.டி.டி.எம்., நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். 


விண்ணப்பிக்கும் முறை:

ஐ.ஐ.டி.டி.எம்., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வாயிலாக மட்டுமே மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.


சேர்க்கை முறை:

நுழைவுத்தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை வழங்கப்படும்.


விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 21


ஐ.ஜி.என்.டி.யு., -ஐ.ஐ.டி.டி.எம்., நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 6


விபரங்களுக்கு: https://iittm.ac.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us