நெஸ்ட் தேர்வு | Kalvimalar - News

நெஸ்ட் தேர்வு

எழுத்தின் அளவு :

அறிவியல் துறையில் உயர்கல்வி பயின்று சாதிக்க விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகளில் குறிப்பிடத்தக்க ஒன்று,  நெஸ்ட் என்று சுருக்கமாக அழைக்கப்படும் நேஷனல் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட்!



முக்கியத்துவம்:



புவனேஸ்வரில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - என்.ஐ.எஸ்.இ.ஆர்., மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான அட்டோமிக் எனர்ஜி சென்டர் பார் எக்ஸ்செலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ் துறை வழங்கும் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நெஸ்ட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. இந்த இரண்டு கல்வி நிறுவனங்களிலும் வழங்கப்படும் படிப்பானது பல தொழிற்கல்விப் படிப்புகளை விட தரம் வாய்ந்ததாகவும் சிறப்பான வேலை வாய்ப்புகளைத் தருவதாகவும் அறியப்படுகிறது.



அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி, அணுசக்தித் துறை மற்றும் விஞ்ஞானம் சார்ந்த அறிவை மாணவர்களுக்கு ஏற்படுத்துவது இக்கல்வி நிறுவனங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த இரண்டு கல்வி நிறுவனமும் 2007ம் ஆண்டு மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பு.



படிப்புகள்:



இந்த இரண்டு கல்வி நிறுவனங்களிலும், 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்பு, உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் துறைகளில் வழங்கப்படுகிறது. 



என்.ஐ.எஸ்.இ.ஆர்., கல்வி நிறுவனத்தில் இப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு ஹோமி பாபா நேஷனல் இன்ஸ்டிடியூட் பட்டம் வழங்குகிறது. மொத்த இடங்கள்: 200



இந்திய அரசின் அட்டோமிக் எனர்ஜி துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக மும்பையில் செயல்படும் சென்டர் பார் எக்ஸ்செலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ் கல்வி நிறுவனத்தில், மிகச் சிறந்த பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் மாணவர்களுக்கு நேரடியாக கற்பிக்கின்றனர். மொத்தம் 57 இடங்கள் கொண்ட ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்பை நிறைவு செய்பவர்களுக்கு 150 ஆண்டுகால பழமை வாய்ந்த மும்பை பல்கலைக்கழகம் பட்டம் வழங்குகிறது. 



நெஸ்ட்:



தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களும், ஏற்கனவே பிளஸ் 2 முடித்திருப்பவரும் இத்தேர்வை எழுதலாம். குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். இயற்பியல், வேதியியல் போன்ற துறைகளில் ஆர்வம் உள்ள மாணவர்கள் அவசியம் எழுத வேண்டிய தேர்வு இது. இந்தியாவில் இந்த ஆண்டுக்கான நெஸ்ட் தேர்வு 90க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெற உள்ளது. எஸ்.சி., / எஸ்.டி., / ஓ.பி.சி., மாணவர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி இட ஒதுக்கீடு உண்டு.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30



தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 14



விபரங்களுக்கு: www.nestexam.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us