பி.ஜி.சி.இ.. படிப்பு! | Kalvimalar - News

பி.ஜி.சி.இ.. படிப்பு!

எழுத்தின் அளவு :

சென்னை, புதுச்சேரி, ராணிப்பேட்டை உட்பட பல்வேறு இடங்களில் பள்ளிகளை நடத்திவரும் டி.ஏ.வி., குழுமம் ஆசிரியர் பயிற்சிக்கான சிறப்பு படிப்பை வழங்குகிறது.



படிப்பு: போஸ்ட் கிராஜுவேட் சர்ட்டிபிகேட் இன் எஜுகேஷன் - பி.ஜி.சி.இ.,



படிப்பு காலம்: ஓர் ஆண்டு



பாடத்திட்டம்: ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான துவக்கநிலை, 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான நடுநிலை, 9ம் மற்றும் 10ம் வகுப்புகளை உள்ளடக்கிய உயர்நிலை ஆகிய மூன்று பள்ளி வகுப்பு நிலைகளில் கவனம் செலுத்தும் வகையில் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.



பாடநேரம்: ஒவ்வொரு நாளும் காலையில் நான்கு மணிநேரம். பின், பள்ளிகளில் நடைமுறை அமர்வுகளில் பங்கேற்றும் வகையில் பாடத்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த பாட ஆசிரியர்களின் நேரடி வகுப்புகள் மூலம் உள்ளடக்க விநியோகம், மாணவர் உளவியல், வகுப்பு மேலாண்மை போன்ற பல்வேறு அம்சங்கள் கற்பிக்கப்படுகிறது. 



யார் படிக்கலாம்: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடித்த, தற்போது பணியாற்றும் ஆசிரியர்கள், ஐ.டி., பணியாளர்கள், இல்லத்தரசிகள், என பலதரப்பினரும் இப்படிப்பை படிக்கலாம். நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படுகிறது.



உதவித்தொகை: தகுதியின் அடிப்படையில் கல்விக்கட்டணத்தில் 50 சதவீதம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.



படிப்பின் முக்கியத்துவம்: 


முன்பு பள்ளி ஆசிரியர் ஆவதற்கு பி.எட்., படிப்பு மட்டும் போதுமானதாக இருந்தநிலையில், தகுதியான ஆசிரியர்கள் தகுதித் தேர்வுகள் மூலம் கண்டறியப்பட்டு, பணியிலமர்த்தப்பட வேண்டும் என்பதால் டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட டெட் தேர்வில் 5.42 லட்சம் பி.எட்., பட்டதாரிகள் பங்கேற்றதில், வெறும் 867 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 0.16 சதவிகிதம் மட்டுமே. 



மேலும், இந்திய அரசின் சார்பாக, சி.பி.எஸ்.இ., நடத்தும், சிடெட் எனும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வாயிலாக கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா போன்ற பள்ளிகளுக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால், இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் ஆசிரியர்கள் கூட மாணவர்களுக்கு தேவையான அறிவை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது அனைத்திற்கும் மேல் லட்சக்கணக்கான பி.எட்., பட்டதாரிகள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். மற்றொறு புறம் தனியார் கல்வி நிறுவனங்கள் தரமான ஆசிரியர்களைத் தேடுகின்றனர். இந்நிலையை மாற்றும் முயற்சியாக, டி.ஏ.வி., பள்ளி குழுமம் பி.ஜி.சி.இ., என்ற இந்த படிப்பை 2018ம் ஆண்டு முதல் வழங்குகிறது.



நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: ஏப்ரல் 25 



விபரங்களுக்கு: 



இணையதளமுகவரி: www.davshikshanam.org



மொபைல் எண்: 7358273735



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us