என்.சி.எச்.எம்.சி.டி., | Kalvimalar - News

என்.சி.எச்.எம்.சி.டி.,

எழுத்தின் அளவு :

நாட்டில் விருந்தோம்பல் மேலாண்மை கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 1982ம் ஆண்டு மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, ’நேஷனல் கவுன்சில் பார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி’. 


விருந்தோம்பல் துறை சார்ந்த கல்வி மற்றும் பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தவும், கல்வி தரத்தை மேம்படுத்தவும் உரிய வழிகாட்டுதல்களையும் இந்த அமைப்பு மேற்கொள்வதோடு பல்வேறு படிப்புகளையும் நேரடியாக வழங்குகிறது.


வழங்கப்படும் படிப்புகள்:


முதுநிலை பட்டப்படிப்பு:

எம்.எஸ்சி.,- ஹாஸ்ப்பிட்டாலிட்டி அட்மினிஸ்ட்ரேசன்


முதுநிலை டிப்ளமா படிப்புகள்:

போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் டயட்டிக்ஸ் அண்ட் ஹாஸ்பிட்டல் புட் சர்வீஸ்

போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் அக்கமொடேஷன் ஆப்ரேஷன்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட்


இளநிலை பட்டப்படிப்பு:

பி.எஸ்சி., இன் ஹாஸ்பிட்டாலிட்டி அண்டு ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேசன்


டிப்ளமா படிப்புகள்:

டிப்ளமா இன் புட் புரொடக்‌ஷன்

டிப்ளமா இன் புட் அண்ட் பிரவரேஜ் சர்வீஸ்

டிப்ளமா இன் பேக்கரி அண்டு கன்பெக்சனரி

டிப்ளமா இன் பிரண்ட் ஆபீஸ் ஆப்ரேஷன்

டிப்ளமா இன் ஹவுஸ்கீப்பிங் ஆப்ரேஷன்


சான்றிதழ் படிப்புகள்:

கிராப்ட்ஸ்மென்ஷிப் சர்ட்டிபிகேட் கோர்ஸ் இன் புட் புரொடக்‌ஷன் 

கிராப்ட்ஸ்மென்ஷிப் சர்ட்டிபிகேட் கோர்ஸ் இன் புட் அண்ட் பிவரேஜ் சர்வீஸ்


சேர்க்கை முறை:

இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்துடன் இணைந்து என்.சி.எச்.எம்.சி.டி., பட்டப்படிப்புகளை வழங்குகிறது. படிப்பிற்கு ஏற்ப கல்வித்தகுதியும், சேர்க்கை முறையும் மாறுபடுகிறது. குறிப்பாக, இளநிலை படிப்புகளில் சேர்க்கை பெற பிரத்யேக நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.


என்.சி.எச்.எம்., - ஜே.இ.இ.,:

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட ’நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி’ஒரு தன்னாட்சி அமைப்பு நடத்தும் முக்கிய தேர்வுகளில் ஒன்று, ’நேஷனல் கவுன்சில் பார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் - ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்‌ஷாமினேஷன்’. முற்றிலும் கம்ப்யூட்டர் வாயிலாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.


நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 10


தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 12


விபரங்களுக்கு: http://nchm.nic.in/ , https://nchmjee.nta.nic.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us