நாளந்தா பல்கலை அட்மிஷன் | Kalvimalar - News

நாளந்தா பல்கலை அட்மிஷன்

எழுத்தின் அளவு :

இந்திய அரசின் வெளியுறுவுத்துறை அமைச்சகத்தின் கீழ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக, வரலாற்று சிறப்புமிக்க பிகார் மாநிலம் நாளந்தாவில் செயல்படும் நாளந்தா பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



வழங்கப்படும் படிப்புகள்:


எம்.பி.ஏ., இன் சஸ்டயினபில் டெவெலப்மெண்ட் அண்டு மேனேஜ்மெண்ட்


எம்.எஸ்சி., இன் ஈக்கோலஜி அண்டு என்விரான்மெண்ட் ஸ்டடீஸ்


எம்.ஏ., இன் புத்திஸ்ட் ஸ்டடீஸ், பிலாசபி அண்டு கம்பேரிட்டிவ் ரிலிஜன்ஸ்


எம்.ஏ., இன் ஹிஸ்டாரிக்கல் ஸ்டடீஸ்



பிஎச்.டி., படிப்புகள்:


* இக்கோலஜி அண்டு என்விரான்மெண்ட் ஸ்டடீஸ்


* ஹிஸ்டாரிக்கல் ஸ்டடீஸ்


* புத்திஸ்ட் ஸ்டடீஸ், பிலாசபி அண்டு கம்பேரிட்டிவ் ரிலிஜன்ஸ்



இவை தவிர ஆங்கிலம், கொரியன், சமஸ்கிருதம், பாலி, திபெத்யன் போன்ற மொழிப்பாடங்களில் டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.


 


தகுதிகள்: படிப்பிற்கு ஏற்ப கல்வித் தகுதிகள் மாறுபடும். அனைத்து படிப்புகளுக்கும் ஆங்கில மொழிப்புலமை அவசியம். டோபல், ஐ.இ.எல்.டி.எஸ்., டி.ஓ.இ.ஐ.சி., பி.டி.இ., எஸ்.டி.இ.பி., ஆங்கிய ஆங்கில மொழிப்புலமை தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 



குறிப்பு: இப்படிப்புகளுக்கு இந்திய மாணவர்கள் மட்டுமின்றி அயல்நாட்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.



விபரங்களுக்கு: https://nalandauniv.edu.in/




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us