புல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார் | Kalvimalar - News

புல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்

எழுத்தின் அளவு :

இந்திய கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் அமெரிக்க உயர்கல்வி முறை குறித்து அறிந்துகொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் இரண்டு வார காலம் அமெரிக்க பயணம் மேற்கொள்ளலாம். அமெரிக்க கல்வி நிறுவனங்களின் வகையில், அங்கீகார நடைமுறை, பாடத்திட்ட மேம்பாடு, நிதி மேம்படுத்தும் முறை, அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சர்வதேச கல்வி மற்றும் மாணவர் சேவை குறித்த அறிவை பெறுவதோடு, இந்திய கல்வி முறை குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.


தகுதிகள்: இந்தியாவில் உள்ள கல்லூரி கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் செயல்படும் சர்வதேச கல்வி மேம்பாடு மற்றும் மேலாண்மை பிரிவில், குறைந்தது இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழக துணை வேந்தர்கள்,  இயக்குநர்கள், பதிவாளர்கள், அயல்நாட்டு கல்வி ஆலோசகர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம்.


உதவித்தொகை: ஜே-1 விசா, சர்வதேச விமான பயணக்கட்டணம், தங்கும் விடுதி செலவுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை: புல்பிரைட்-நேரு அனைத்து உதவித்தொகைகளுக்கும் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 14


விபரங்களுக்கு: www.usief.org.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us