ஏ.சி.எஸ்.ஐ.ஆர்., | Kalvimalar - News

ஏ.சி.எஸ்.ஐ.ஆர்.,

எழுத்தின் அளவு :

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளின் மூலம் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குவதோடு, சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கான பயிற்சிகளையும், உயர் தரமான கல்வியையும் வழங்குவதற்காக, நிறுவப்பட்ட கல்வி நிறுவனமே ‘அகாடமி ஆப் சயின்டிபிக் அண்ட் இனோவேடிவ் ரிசர்ச்’!


அறிமுகம்:

மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட பிரத்யேக சட்டத்தின்படி, கடந்த 2011ம் ஆண்டில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக ஏ.சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவப்பட்டது. மேம்பட்ட ஆராய்ச்சி படிப்பினை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. 


மேலும், சயின்டிபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் ஆர்கனைசேஷன் - எச்.ஐ.ஆர்.ஓ., என்கிற அங்கீகாரமும் இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் சிறந்த தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியை நாடு அடையும் என்ற நோக்கில் ஏ.சி.எஸ்.ஐ.ஆர்., இயங்கி வருகிறது.


நோக்கங்கள்:

* இயற்கை அறிவியல், உயிர் அறிவியல், கணிதம் மற்றும் கணக்கீட்டு அறிவியல், மருத்துவம், பொறியியல் ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சி வசதிகளை வழங்குவது.

* புதுமையான அறிவியல் சிந்தனைகளை வரவேற்பது.

* மதிப்பெண்கள் மற்றும் சதவீதங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கு மாறாகத் தொழில்நுட்ப ரீதியான கற்றல் திறனை மேம்படுத்துவது.

* இந்தியா மற்றும் பிற நாட்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து அறிவியல் தொழில்நுட்ப வசதிகளை உயர்த்துவது.

* துறை சார்ந்த பயிற்சிகளையும், ஆராய்ச்சிகளையும் முறைப்படுத்துவது.


படிப்புகள்:

* பிஎச்.டி., இன் இன்ஜினியரிங்

* இண்டக்ரேட்டட் டூயல் டிகிரி பிஎச்.டி., புரோகிராம் இன் இன்ஜினியரிங்

* பிஎச்.டி., இன் சயின்ஸ்

* எம்.டெக்.,

* இண்டக்ரேட்டட் எம்.எஸ்சி., பிஎச்.டி., இன் நியூட்ரீஷனல் பயாலஜி

* எம்.எஸ்சி., இன் புட் டெக்னாலஜி

* இண்டக்ரேட்டட் எம்.எஸ்சி., பிஎச்.டி., இன் கிளினிக்கல் ரிசர்ச்

* இண்டக்ரேட்டட் எம்.எஸ்சி., பிஎச்.டி., இன் ஹெல்த் இன்பர்மெடிக்ஸ்

* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா புரோகிராம்ஸ் (ரோபடிக்ஸ், மானுபாக்ச்சரிங் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் மெய்ன்டனன்ஸ்)


சேர்க்கை முறை:

மாணவர்களின் மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் ஆண்டிற்கு இரு முறை, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஏ.சி.எஸ்.ஐ.ஆர்., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். 2021 ஆக்ஸ்ட் மற்றும் 2022 ஜனவரிக்கான மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் தற்போது விண்ணப்பிக்க முடியும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31ம் தேதி


விபரங்களுக்கு: http://acsir.res.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us