நெஸ்ட் தேர்வு | Kalvimalar - News

நெஸ்ட் தேர்வு

எழுத்தின் அளவு :

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வே, ’நெஸ்ட்’ எனப்படும் நேஷனல் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட்.


படிப்புகள்: எம்.எஸ்சி., - இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம்


கல்வி நிறுவனங்கள்: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் - என்.ஐ.எஸ்.இ.ஆர்., புபனேஷ்வர் மற்றும் டிபார்ட்மெண்ட் ஆப் ஆடோமிக் எனர்ஜி செண்டர் பார் எக்ஸ்லன்ஸ் இன் பேசிக் சயின்சஸ், மும்பை.


தகுதிகள்: 12ம் வகுப்பில் அறிவியல் பிரிவை தேர்வு செய்து படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பெண் சதவீதத்தில் 5 சதவீதம் வரை விலக்கு அளிக்கப்படும். தற்போது 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை: நெஸ்ட் நுழைவுத்தேர்வின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


தேர்வு முறை: கணினி வழி தேர்வாக மட்டுமே நெஸ்ட் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் 5 பகுதிகளாக கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். முதல் பகுதியில் பொதுவான கேள்விகள் கேட்கப்படும், இந்த பகுதியை அனைவரும் எழுத வேண்டும். இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கென அடுத்தடுத்த தனி பிரிவுகள் இருக்கும். அனைத்துக் கேள்விகளும் அப்ஜெக்டிவ் டைப் கேள்விகளாகவே இருக்கும்.


விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஏப்ரல் 30


தேர்வு நாள்: ஜூன் 14


விபரங்களுக்கு: www.nestexam.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us