எஸ்.பி.ஏ., அட்மிஷன் | Kalvimalar - News

எஸ்.பி.ஏ., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்தின் காட்டுப்பாட்டின் கீழ், டெல்லியில் இயங்கி வரும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான ஸ்கூல் ஆப் பிளானிங் அண்ட் ஆர்க்கிடெக்ச்சர் (எஸ்.பி.ஏ.,) கல்வி நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது.


படிப்புகள்:

* பேச்சுலர் ஆப் ஆர்க்கிடெக்ச்ர் 

*  எம்.ஆர்க்., (ஆர்க்கிடெக்ச்சுரல் கன்சர்வேஷன்)

*  எம்.ஆர்க்., (அர்பன் டிசைன்)

*  எம்.ஆர்க்., (லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர்)

*  எம்.டெஸ்., (இண்டஸ்ட்ரியல் டிசைன்)

*  எம்.பிளான்., (என்விரான்மென்ட்டல் பிளானிங்)

*  எம்.பிளான்., (ஹவுசிங்)

*  எம்.பிளான்., (ரீஜினல் பிளானிங்)

*  எம்.பிளான்., (டிரான்ஸ்போர்ட் பிளானிங்)

*  எம்.பிளான்., (அர்பன் பிளானிங்)

*  மாஸ்டர் ஆப் லாண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர்

*  மாஸ்டர் ஆப் பில்டிங் இன்ஜினியரிங் அண்ட் மேனேஜ்மெண்ட்

* இவை தவர பல்வேறு பிரிவுகளில் முழுநேர மற்றும் பகுதிநேர பிஎச்.டி., படிப்புகள் 


தகுதிகள்:

பி.ஆர்க்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஜே.இ.இ., மெயின் 2021 வாயிலாக நடத்தப்படும். முதுநிலை படிப்பிற்கு துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை 55 சதவீத மதிப்பெண்ணுடன் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு மதிப்பெண் சதவீதத்தில் 5 சதவீதம் வரை விலக்கு அளிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:

இதற்கான விண்ணப்பத்தை மாணவர்கள் எஸ்.பி.ஏ., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்வி நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் சமர்பிக்க வேண்டும். 


மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறையின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். தற்போது இறுதியாண்டு தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் மாணவர்களும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


உதவித்தொகை:

கேட் மற்றும் சீட் தகுதி தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண் சதவீதத்திற்கு ஏற்ப உதவித்தொகை வழங்கப்படும்.


விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 27


விபரங்களுக்கு: www.spa.ac.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us