புல்பிரைட் நேரு போஸ்ட் டாக்டோரல் ரீசர்ச் பெலோஷிப் | Kalvimalar - News

புல்பிரைட் நேரு போஸ்ட் டாக்டோரல் ரீசர்ச் பெலோஷிப்

எழுத்தின் அளவு :

இந்தியாவைச் சேர்ந்த பிஎச்.டி., அல்லது டி.எம்., பட்டம் பெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான உதவித்தொகையுடன் கூடிய பிரத்யேக கல்வி திட்டம்.


துறைகள்: பயோ இன்ஜினியரிங், மெட்டீரியல் சயின்ஸ், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ், சைபர் செக்யூரிட்டி, வேளாண்மை, கணினி அறிவியல், பொருளாதாரம், கணிதம், சர்வதேச சட்டக் கல்வி, நரம்பியல், கல்வி கொள்கை மற்றும் திட்டமிடல், வரலாறு, மானுடவியல், பெண்கள் ஆய்வு மற்றும் பாலின ஆய்வு, பொது கொள்கை, பொது சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகள்.


தகுதிகள்: செப்டம்பர் 14, 2021ம் தேதி நிலவரப்படி, 4 ஆண்டுகளுக்குள், பிஎச்.டி., நிறைவு செய்தவர்கள் அல்லது நிறைவு செய்ய உள்ளவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.


உதவித்தொகை: தேர்வு செய்யும் பாடத் துறைகளுக்கு ஏற்ப 8 முதல் 24 மாதங்கள் வரை கல்விக் கட்டணம், விமான பயணக் கட்டணம், மாதாந்திர செலவுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். மேலும், மாத ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.


விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 15


விபரங்களுக்கு: www.usief.org.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us