சென்னை பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வி வாயிலாக, சான்றிதழ் படிப்பு, டிப்ளமா, இளநிலை, முதுநிலை படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப் படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வழங்கப்பட உள்ளன.
சென்னை பல்கலை வளாகத்தில் உள்ள, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையத்தில், சனி, ஞாயிற்று கிழமைகளிலும் விண்ணப்பங்களை பெறலாம்.
கூடுதல் தகவல்களை, http://www.ideunom.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.