10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு | Kalvimalar - News

10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு

எழுத்தின் அளவு :

தமிழக அரசு தேர்வுத் துறை இயக்குனர் அறிவிப்பு:


பிளஸ் 1 மாணவர்களுக்கான துணை தேர்வு, செப்., 29ல் துவங்க உள்ளது. முதல் நாளில் மொழி பாடம், செப்., 30ல் ஆங்கிலம்; அக்., 1 முதல் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கின்றன. அக்., 7ல் அனைத்து பாடங்களுக்குமான தேர்வுகள் முடிகின்றன.


பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு, செப்., 21ல் துவங்க உள்ளது. முதல் நாளில், மொழி பாடம்; செப்., 22ல் ஆங்கிலம்; செப்., 23ல், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் துவங்கி, செப்., 28ல் முடிகின்றன. இறுதி நாளில், வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.


பத்தாம் வகுப்புக்கான துணை தேர்வு, செப்., 21ல் மொழி பாடத்துடன் துவங்குகிறது. 22ல் ஆங்கிலம்; 23ல், கணிதம்; 24ல், அறிவியல்; 25ல், சமூக அறிவியல்; செப்., 26ல், விருப்ப மொழி பாடத்துடன் முடிகின்றன தேர்வுகள், காலை, 10:00 மணிக்கு துவங்கி, பகல், 1:15 மணிக்கு நிறைவடையும். முதல், 10 நிமிடங்கள், வினாத்தாளை வாசித்து பார்க்க நேரம் ஒதுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us