இக்னோவில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

இக்னோவில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

மதுரை மண்டல இக்னோ இயக்குனர் ஷர்மா தெரிவித்துள்ளதாவது:


தொலைநிலை படிப்புகளுக்கு சான்றிதழ், டிப்ளோமா, பி.ஜி. டிப்ளோமா, இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான 2020 (ஜூலை) ஆன்லைன் சேர்க்கை துவங்கியது.


விண்ணப்பம் சமர்ப்பிக்க ஆக.,31 கடைசி நாள். 100 எஸ்.சி.,/எஸ்.டி., மாணவருக்கு (பணி புரிபவர்களாக இருத்தல் கூடாது) சேர்க்கை கட்டணம் விலக்கு அளிக்கப்படும்.பொருளாதாரம், ஆங்கிலம், ஹிந்தி, வரலாறு, பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், சமூகவியல் இளநிலை பட்டம், உணவு மற்றும் ஊட்டச் சத்துக்கான சான்றிதழ் மற்றும் குழந்தை பருவ பராமரிப்பு டிப்ளோமா படிப்புகளும் உள்ளன. 

http://rcmadurai.ignou.ac.in/ என்ற இணையதளத்தில் விவரம் தெரிந்துகொள்ளலாம். மண்டல மைய தொலைபேசி எண்: 0452- 238 0733 ஐ தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us