போட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி | Kalvimalar - News

போட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி

எழுத்தின் அளவு :

சென்னை; வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், போட்டி தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்காக, வரும், 24 முதல், ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.


சென்னை, கிண்டியில் இயங்கி வரும், மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், எஸ்.எஸ்.சி., - ஐ.பி.பி.எஸ்., - பி.ஓ., உள்ளிட்ட மத்திய தேர்வுகளுக்கு, இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளன.வரும், 24ம் தேதியில் இருந்து, திங்கள் முதல் வெள்ளி வரை, ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடக்கும்.


இதில், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், docs.google.com/forms/d/e/1FAlpQL Sehx990GXxx_6h-_BJWDEbK46on1xB5vZ8rLXVXGkqgHLQMbQ/viewform என்ற, ஆன்லைன் இணைப்பு வழியாக பதிவு செய்ய வேண்டும் என, மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us