சென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு | Kalvimalar - News

சென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு

எழுத்தின் அளவு :

சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வி நிறுவனத்தில், 2020 - 21ம் கல்வி ஆண்டில், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் அனுமதி பெற்ற பாடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.



இளநிலை, முதுநிலை, வணிக நிர்வாகவியல், முதுநிலை டிப்ளமா, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகியவற்றில், மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்ப பதிவு துவங்குகிறது. இதன்படி, www.online.ideunom.ac.in என்ற இணையதளத்தில், இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 



சென்னை பல்கலையின், 115 கற்றல் உதவி மையங்கள் வழியாகவும் சேரலாம். விபரங்களை, சென்னை பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us