கவின்கலை படிப்புக்கு விண்ணப்பம் | Kalvimalar - News

கவின்கலை படிப்புக்கு விண்ணப்பம்

எழுத்தின் அளவு :

தமிழக அரசின் கவின்கலை கல்லுாரிகளில், வரும் 27ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன.


சென்னை - எழும்பூர், கும்பகோணம் - கொட்டையூர் ஆகிய இடங்களில், கவின்கலை கல்லுாரிகள் இயங்குகின்றன. இவற்றில் ஓவியம், சிற்பம், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. அதேபோல், சென்னை - மாமல்லபுரத்தில் இயங்கி வரும் சிற்பக் கல்லுாரியில், பாரம்பரிய கட்டடக்கலை, சிலை வடிவமைப்பு உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. சென்னை, அடையாறில் இசைக் கல்லுாரி உள்ளது. இதில், பாரம்பரிய நடனம் மற்றும் இசைப் படிப்புகள் உள்ளன. இதுபோல், தமிழகத்தில், கவின்கலை சார்ந்த ஏழு கல்லுாரிகள் உள்ளன.


இவை, கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வருகின்றன. இவற்றில், பட்டயம், இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகள் உள்ளன. இவற்றுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 27ம் தேதி துவங்கும் என, கலை பண்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us