ஓ.சி.எஸ்.ஐ., உதவித்தொகை | Kalvimalar - News

ஓ.சி.எஸ்.ஐ., உதவித்தொகை

எழுத்தின் அளவு :

தி ஆக்ஸ்போர்டு அண்டு கேம்ப்ரிட்ஜ் சொசைட்டி ஆப் இந்தியா - ஓ.சி.எஸ்.ஐ., எனும் புதுடில்லியை சேர்ந்த லாப நோக்கமற்ற முன்னாள் மாணவர்கள் அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்குகிறது.


கல்வி நிறுவனங்கள்:

யுனிவர்சிட்டி ஆப் கேம்ப்ரிட்ஜ்

யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்டு 

ஆகிய யு.கே.,வில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறும் இந்திய மாணவர்கள் இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.


படிப்புகள்:

* இளநிலை பட்டப்படிப்பு

* இரண்டாம் இளநிலை பட்டப்படிப்பு

* ஓர் ஆண்டு எம்.பில்., எல்.எல்.எம்., பி.சிஎல்., டிப்ளமா, எம்.பி.ஏ., பி.ஜி.சி.இ., போன்ற படிப்புகள்

* பொறியியல், மருத்துவம், எம்.எஸ்சி., ஆராய்ச்சி சார்ந்த முதுநிலை படிப்புகள் 

* பிஎச்.டி., படிப்பு


உதவித்தொகை விபரம்:

* ஓ.சி.எஸ்.ஐ., கே.கே. லுத்ரா மெமோரியல் ஸ்காலர்ஷிப் மற்றும் ஓ.சி.எஸ்.ஐ., அனிதா பானர்ஜி மெமோரியல் ஸ்காலர்ஷிப் ஆகிய திட்டங்களில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.


* கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இம்மானுவேல் கல்லூரியில் படிக்கும் மாணவருக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை


* செயின்ட் ஹில்டா கல்லூரி, ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவருக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை


தகுதிகள்:

* இந்திய குடிமகனாகவும், இந்தியாவில் குடியிருக்கும் மாணவராகவும் இருத்தல் வேண்டும்.

* 30 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

* இந்திய கல்வி நிறுவனங்களில் படித்தவராக இருப்பதும் அவசியம்.


தேர்வு செய்யப்படும் முறை:

சாப்ட் ஸ்கில்ஸ், ஹார்டு ஸ்கில்ஸ் மற்றும் நிதி நிலைமை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.


விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 1


விபரங்களுக்கு: http://www.oxbridgeindia.com/scholarships/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us