தொலைநிலை கற்றல் உதவித்தொகை | Kalvimalar - News

தொலைநிலை கற்றல் உதவித்தொகை

எழுத்தின் அளவு :

இங்கிலாந்தின் சர்வதேச மேம்பாட்டுத் துறை (டி.எப்.ஐ.டி.,) நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டுள்ள காமன்வெல்த் தொலைநிலை கற்றல் உதவித்தொகை, வளரும் காம்ன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 


முக்கியத்துவம்

வளரும் நாடுகளில் உள்ள திறமையான மற்றும் தகுதி வாய்ந்தவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் காமன்வெல்த் நாடுகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில், முதுநிலை படிப்புகளுக்காக இந்த உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 


சொந்த நாட்டில் இருந்துகொண்டே, உலகத்தரம் வாய்ந்த பயிற்சியை பெற்று, தங்கள் சொந்த நாடுகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்துடன், உரிய திறன் பெற்றவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதேநேரம், நிதி மற்றும் பிற காரணங்களுக்காக இங்கிலாந்தில் படிக்க முடியாதவர்களை இலக்காகக் கொண்டும், இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.


பிரிவுகள்:

* சயின்ஸ் அண்டு டெக்னாலஜி பார் டெவெலப்மெண்ட்

* ஸ்டெரன்த்னிங் ஹெல்த் சிஸ்டம்ஸ் அண்டு கெபாசிட்டி

* புரொமோட்டிங் குளோபல் பிராஸ்பெரிட்டி

* ஸ்டெரன்த்னிங் குளோபல் பீஸ், செக்யூரிட்டி அண்டு கவர்னன்ஸ்

* ஸ்டெர்ன் த்னிங் ரெசிலியன்ஸ் அண்டு ரெஸ்பான்ஸ் டு க்ரைசெஸ்

* ஆக்சஸ், இன்குலேசன் அண்டு ஆப்பர்சூனிட்டி


தகுதிகள்:

தகுதிவாய்ந்த காமன்வெல்த் நாட்டின் குடிமகனாக இருத்தல் வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் சிறப்பான செயல்பாடு அவசியம். மேலும், இந்த உதவித்தொகை இல்லாமல் படிப்பை தொடர இயலாத வகையிலான சூழலை கொண்டவராக இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: 

காம்ன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன் (சி.எஸ்.சி.,)யின் இணையதளம் வாயிலாக ஆன்லைன் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆராய்ந்து, உரிய தகுதியும், திறனும் பெற்றவர்களை சி.எஸ்.சி., கவனமுடன் தேர்வு செய்கிறது. எனவே, தேவையான அனைத்து தகவல்கள் மற்றும் சான்றுகளுடன் விண்ணப்பிப்பது அவசியம். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணமின்றி தொலைநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 13


விபரங்களுக்கு: http://cscuk.dfid.gov.uk/apply/distance-learning/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us