டிப்ளமா படிப்புகள் | Kalvimalar - News

டிப்ளமா படிப்புகள்

எழுத்தின் அளவு :

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சகத்தின் கீழ் ஹைதராபாத்தில் செயல்படும் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் டூல் டிசைன் கல்வி நிறுவனத்தில் டிப்ளமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


படிப்புகள்: 

* டிப்ளமா இன் டூல், டை அண்டு மோல்டு மேக்கிங் - டி.டீ.டி.எம்., (4 ஆண்டுகள்)

* டிப்ளமா இன் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - டி.இ.சி.இ., (3 ஆண்டுகள்)

* டிப்ளமா இன் ஆட்டோமேஷன் அண்டு ரோபாடிக்ஸ் இன்ஜினியரிங் - டி.ஏ.ஆர்.இ., (3 ஆண்டுகள்)

* டிப்ளமா இன் புரொடக்‌ஷன் இன்ஜினியரிங் - டி.பி.இ., (3 ஆண்டுகள்)


தகுதிகள்: டி.டீ.டி.எம்., படிப்பில் சேர்க்கை பெற, 15 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். மேலும், 10ம் வகுப்பில்  50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. 


இதர படிப்புகளில் சேர்க்கை பெற, 19 வயதிற்கு உட்பட்டவராகவும், 10 வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். நுழைவுத்தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 2


நுழைவுத்தேர்வு நாள்: மே 10


விபரங்களுக்கு: www.citdindia.org


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us