எனக்கான எதிர்காலத் துறை என்பது பாங்க் கிளார்க் வேலையா அல்லது நான் படித்து வரும் படிப்புக்கேற்ற ஐ.டி., துறை வேலையா என்பது பெரிய குழப்பமாக உள்ளது. தயவு செய்து விளக்கவும். | Kalvimalar - News

எனக்கான எதிர்காலத் துறை என்பது பாங்க் கிளார்க் வேலையா அல்லது நான் படித்து வரும் படிப்புக்கேற்ற ஐ.டி., துறை வேலையா என்பது பெரிய குழப்பமாக உள்ளது. தயவு செய்து விளக்கவும்.ஏப்ரல் 10,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

உங்களது கடிதத்திலிருந்து நீங்கள் பி.எஸ்சி., ஐ.டி., படித்து வருவதை அறிகிறோம். 2ம் ஆண்டில் படித்து வரும் நீங்கள் இது வரை பெற்றுள்ள மதிப்பெண்கள் சராசரிக்கு சற்று அதிகமாக மட்டுமே இருக்கிறது. 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் போதே உங்களது எதிர்கால வேலை பற்றி யோசிப்பது ஆரோக்கியமானது. ஆனால் தேவையற்ற குழப்பங்களை நீங்கள் விலக்க வேண்டும்.

ஐ.டி., என்ற பெயரில் நீங்கள் படித்து வரும் பட்டப்படிப்பில் சராசரியாக படித்து வரும் நீங்கள் இதே போலவே படிப்பை முடித்தால் உங்களுக்கு உங்கள் துறை சார்ந்த நல்ல வேலை கிடைப்பது மிகக் கடினம். உங்களைப் போலவே எண்ணற்ற மாணவர்களும் மாணவிகளும் அதைவிட முக்கியமாக அவர்களது பெற்றோரும் நல்ல படிப்பில் படித்தாலே போதும், நல்ல வேலை கிடைத்து விடும் என்று நம்பிவிடுகிறார்கள்.

உங்களையே எடுத்துக் கொள்வோம். 2ம் ஆண்டில் படித்தாலும் எதிர்கால வேலைக்காக நீங்கள் இதுவரை உங்களது திறன்கள் எதையும் வளர்த்துக் கொள்ளவில்லை. ஐ.டி., துறையில் இன்ஜினியரிங் மட்டுமல்லாது பல படிப்புகளைப் படித்தவருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன தான் என்றாலும் பி.எஸ்சி., ஐ.டி., படித்தவருக்கு அடிப்படைப் பணி வாய்ப்புகளே கிடைக்கின்றன.

நல்ல வேலைபெற வேண்டுமென்றால் நீங்கள் உங்களது தகுதிகளை மேம்படுத்திக் கொள்வதை விட ஐ.டி., சார்ந்த உங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். உங்களது டொமைன் திறன்கள் தவிர ஆங்கில தகவல் தொடர்புத் திறன், பழகும் திறன், தலைமைப் பண்பு போன்ற மென்திறன்களையும் நீங்கள் பெற வேண்டும். இவை அனைத்தையும் பெற்றால் தான் உங்களது துறையில் நீங்கள் நல்ல வேலை பெற முடியும்.

இதற்கு மாறாக நீங்கள் போட்டித் தேர்வுகள் எழுதி வேலை பெற விரும்பினால் அதற்கேற்ற முயற்சிகளைத் தொடங்க வேண்டியதும் இப்போது தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்கும் மென்திறன்கள் அவசியம் தான். எனவே பட்டப்படிப்பு படிக்கும் வரை வெறும் படிப்பே போதும் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us