சிறப்பு படிப்புகள் | Kalvimalar - News

சிறப்பு படிப்புகள்

எழுத்தின் அளவு :

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மைசூரில் இயங்கும் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பீச் அண்ட் ஹியரிங் கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.



படிப்புகள்:


* பாச்சுலர் ஆப் ஆர்ட்ஸ் இன் ஸ்பீச் லாங்குவேஜ் பாத்தாலஜி


* மாஸ்டர் ஆப் சயின்ஸ் இன் ஸ்பீச் லாங்குவேஜ் பாத்தாலஜி


* எம்.எட்., ஸ்பெஷல் இன் ஹியரிங் இம்பார்மெண்ட்


* பி.எட்., ஸ்பெஷல் இன் ஹியரிங் இம்பார்மெண்ட்


* பி.ஜி., டிப்ளமா இன் கிளினிக்கல் லிங்குவிஸ்டிக்ஸ் பார் ஸ்பீஸ் லாங்குவேஜ் பாத்தாலஜி


* பி.ஜி., டிப்ளமா இன் பார்ன்சிக் ஸ்பீச் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி


* பி.ஜி., டிப்ளமா இன் ஆகுமெண்டேடிவ் அண்ட் அல்டர்நேடிவ் கம்யூனிகேஷன்


* பி.ஜி., டிப்ளமா இன் நியுரோ - ஆடியாலஜி


* டிப்ளமா இன் ஹியர்ங் எய்ட் அண்ட் இயர் மோல்ட் டெக்னாலஜி


* டிப்ளமா இன் இயர்லி சைல்ட்வுட் ஸ்பெஷல் எஜூகேஷன் இன் இயரிங் இம்பார்மெண்ட்


* டிப்ளமா இன் ஹியரிங், லாங்குவேஜ் அண்ட் ஸ்பீச்


* பிஎச்.டி., -ஆடியாலஜி, ஸ்பீச் லாங்குவேஜ் பாத்தாலஜி, ஸ்பீச் அண்ட் ஹியரிங்



தகுதிகள்: டிப்ளமா படிப்பிற்கு 12ம் வகுப்பு முடித்தவராகவோ அல்லது டிப்ளமா பட்டம் பெற்றவராகவோ இருக்க வேண்டும். இளநிலை படிப்பிற்கு 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். முதுநிலை டிப்ளமா மற்றும் டிப்ளமா படிப்பிற்கு துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பைப் பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி., படிப்பிற்கு முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 



விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பப் பதிவை கல்வி நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக மட்டுமே செய்ய முடியும்.



தேர்வு முறை: சில படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது அவசியம். சி.பி.எஸ்.இ., கல்வி முறையில் 11 மற்றும் 12ம் வகுப்புப் படத்திட்டங்களின் அடிப்படையில் நுழைவுத் தேர்விற்கான கேள்விகள் அமைந்திருக்கும். இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதப் பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். 



சேர்க்கை முறை: குறிப்பிட்ட சில படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், பிற படிப்புகளுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் கலந்தாய்வின் அடிப்படையிலும் சேர்க்கை வழங்கப்படும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 29



விபரங்களுக்கு: www.aiishmysore.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us