சி.யு.சி.இ.டி.,-2020 | Kalvimalar - News

சி.யு.சி.இ.டி.,-2020

எழுத்தின் அளவு :

நாட்டிலுள்ள 15 மத்திய பல்கலைக்கழகங்கள், 4 மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - திருச்சிராப்பள்ளி (என்.ஐ.டி.,-டி) இணைந்து அக்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தும் பொது நுழைவுத்தேர்வே, ‘சென்ட்ரல் யுனிவர்சிட்டீஸ் காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட்’ (சி.யு.சி.இ.டி.,) 

இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வைப் பொறுத்தே, பல்கலைக்கழகங்கள் வழங்கும் பல்வேறு படிப்புகளிலும் மாணவர்கள் சேர்க்கை பெற முடியும்.

துறைகள்: 
வேதியியல், உயிர் அறிவியல், கணிதம், இயற்பியல், நூலக அறிவியல், வணிகவியல், உளவியல், கணினி அறிவியல், புவியியல், தோட்டக்கலை, நுண் உயிரியல், புள்ளியியல், வரலாறு, தொடர்பியல், வணிக நிர்வாகம், இசை, தமிழ், இந்தி, ஆங்கிலம், பொருளாதாரம், மேலாண்மை, சட்டம், தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள்.

பங்குபெறும் பல்கலைக்கழகங்கள்:
அசாம் பல்கலைக்கழகம்- சிலிச்சர், பாபா குலாம் ஷா பாத்ஷா பல்கலைக்கழகம் - பெங்களூரு டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் பல்கலைக்கழகம், ஆந்திர பிரதேசம் மத்திய பல்கலைக்கழகம், குஜராத் மத்திய பல்கலைக்கழகம், ஹரியானா மத்திய பல்கலைக்கழகம், ஜம்மு மத்திய பல்கலைக்கழகம், ஜார்கண்ட் மத்திய பல்கலைக்கழகம், கர்நாடகா மத்திய பல்கலைக்கழகம், காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகம், கேரளா மத்திய பல்கலைக்கழகம், ஒடிசா மத்திய பல்கலைக்கழகம், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம், ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம், சவுத் பிகார் மத்திய பல்கலைக்கழகம், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், கல்லிகோட் பல்கலைக்கழகம்- பெர்காம்பூர், சர்தார் பட்டேல் யுனிவர்சிட்டி ஆப் போலீஸ், செக்யூரிட்டி அண்டு கிரிமினல் ஜஸ்டீஸ்- ஜோத்பூர்

விண்ணப்பிக்கும் முறை: 
www.cucetexam.in இணையதளம் வாயிலாக, ஆன்லைனில் மட்டுமே தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 11

தேர்வுகள் நடைபெறும் நாள்: 
முதுநிலை பட்டப்படிப்புகள்- மே 30 மற்றும் 31
ஆராய்ச்சி படிப்புகள் - ஜூன் 6 மற்றும் 7

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள்: ஜூன் 26

விபரங்களுக்கு: https://cucetexam.in/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us