குளோபல் கொரியா உதவித்தொகை | Kalvimalar - News

குளோபல் கொரியா உதவித்தொகை

எழுத்தின் அளவு :

கொரியா அரசு வழங்கும் 2020 குளோபல் கொரியா ஸ்காலர்ஷிப் எனும் உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற இந்திய மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.


இதற்கான அறிவிப்பை இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் கொரியாவில் உள்ள ’நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் இன்டர்நேஷனல் எஜுகேஷன்’ (என்.ஐ.ஐ.இ.டி.,) நிறுவனத்தால் இணைக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி மேற்கொள்ளலாம்.


உதவித்தொகையின் மொத்த எண்ணிக்கை: 22


இந்திய அரசால் பரிந்துரைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை: 45. இவர்களில் தகுதியான 22 பேரை கொரிய அரசு தேர்வு செய்துகொள்ளும்.


படிப்பு நிலைகள்: முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி மற்றும் டாக்டோரல் படிப்புகள்.


வயது வரம்பு: செப்டம்பர் 1ம் தேதியின் படி, 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பேராசிரியராக பணிபுரிபவர்கள் 45 வயதிற்கள் இருக்கலாம்.


கல்வி தகுதிகள்:

முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு, இளநிலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஆராய்ச்சி படிப்புகளுக்கு, முதுநிலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


உதவித்தொகை சலுகைகள்: விமானக் கட்டணம், மாத உதவித்தொகை, ஆராய்ச்சி கட்டணம், தங்குமிடம், மருத்துவ காப்பீடு உட்பட பல்வேறு சலுகைகள் உண்டு.


விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் எனும்  http://mhrd.gov.in/scholarships இணையதளம் வாயிலாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


தேவைப்படும் ஆவணங்கள்: பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு, இளநிலை / முதுநிலை / ஆராய்ச்சி படிப்பு சான்றிதழ்கள்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 21


விபரங்களுக்கு:  http://mhrd.gov.in/scholarships


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us