ஹூபர்ட் எச். ஹம்ப்ரி பெல்லோஷிப் | Kalvimalar - News

ஹூபர்ட் எச். ஹம்ப்ரி பெல்லோஷிப்

எழுத்தின் அளவு :

புல்பிரைட்-நேரு மாஸ்டர்ஸ் பெல்லோஷிப், புல்பிரைட்-நேரு டாக்டோரல் பெல்லோஷிப்,  புல்பிரைட்-நேரு போஸ்ட் டாக்டோரல் பெல்லோஷிப், புல்பிரைட்-நேரு அகடமிக் அண்டு புரொபஷனல் எக்ஸ்லன்ஸ் பெல்லோஷிப், புல்பிரைட்-நேரு எஜுகேஷன் அட்மினிஸ்ட்ரேடர்ஸ் செமினார் போன்ற பிரதான உதவித்தொகைகள் மட்டுமின்றி, இதர உதவித்தொகைககளும் புல்பிரைட் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. அவற்றில் ஒன்று, ஹூபர்ட் எச். ஹம்ப்ரி பெல்லோஷிப்!

முக்கியத்துவம்
புல்பிரைட் -நேரு உதவித்தொகை திட்டங்கள் பிரத்யேகமாக இந்தியர்களுக்கு வழங்கப்படும் நிலையில்,  ஹூபர்ட் எச். ஹம்ப்ரி பெல்லோஷிப் வளரும் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் துணைத் தலைவரான ஹூபர்ட் எச். ஹம்ப்ரே நினைவாக 1978ம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுகிறது. 

யாரெல்லாம் பயன்பெறலாம்?: அரசு துறைகளில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், திட்டமிடுபவர்கள், நிர்வாகிகள் மட்டுமின்றி, தனியார் துறைகள், அரசு சாரா நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொது சேவை அர்ப்பணிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். 

பிரிவுகள்: விவசாயம் மற்றும் கிராம்பபுற வளர்ச்சி; தொடர்பியல்/ இதழியல்; பொருளாதார வளர்ச்சி; கல்வி நிர்வாகம், திட்டமிடல் மற்றும் கொள்கை; நிதி மற்றும் வங்கி; கல்வி நிர்வாகம்; எச்.ஐ.வி / எய்ட்ஸ் கொள்கை மற்றும் தடுப்பு; மனித வள மேலாண்மை; சட்டம் மற்றும் மனித உரிமைகள்; இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் கொள்கை மற்றும் காலநிலை மாற்றம்; பொது சுகாதார கொள்கை மற்றும் மேலாண்மை; பொது கொள்கை பகுப்பாய்வு மற்றும் பொது நிர்வாகம்; கல்வி, சிகிச்சை மற்றும் தடுப்பு; தொழில்நுட்ப கொள்கை மற்றும் மேலாண்மை; நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடல் ஆகிய பிரிவுகளில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பயன்கள்: இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர்கள் 10 மாத காலம் அமெரிக்காவில் தனித்துவ அனுபவத்தை பெறலாம். அதற்கான போக்குவரத்து செலவு, விமானக் கட்டணம் உட்பட பல்வேறு செலவுகளையும் இத்திட்டமே ஏற்றுக்கொள்ளும்.

ஆங்கில அறிவு: எழுதுதல் மற்றும் பேசுதலில் ஆங்கில மொழிப் புலமையை நிரூபிக்கும் வகையில் டோபல் தேர்வை எழுத வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 15

விபரங்களுக்கு: https://www.humphreyfellowship.org/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us