ஐ.ஐ.எஸ்சி., | Kalvimalar - News

ஐ.ஐ.எஸ்சி.,

எழுத்தின் அளவு :

நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் மேம்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி வழங்குவதோடு, அடிப்படை ஆய்வுகள் மற்றும் சவால்களுக்கு உரிய தீர்வு அளிப்பதற்கும் முக்கியத்துவம் அளித்துவருகிறது.




மொத்தம் 42 துறைகளில் 500 ஆசிரியர்களுடன், உலகத்தரம் வாய்ந்த ஆய்வகங்களைக் கொண்டுள்ள இக்கல்வி நிறுவனத்தில் பயிலும் 4.200 மாணவர்களில், 2,750 பேர் ஆராய்ச்சி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




வழங்கப்படும் படிப்புகள்




இளநிலை பட்டப்படிப்புகள்:


பேச்சுளர் ஆப் சயின்ஸ் (ரிசர்ச்) - 4 ஆண்டுகள்: பயாலஜி, கெமிஸ்ட்ரி, எர்த் அண்டு என்விரான்மென்டல் சயின்ஸ், மெட்டீரியல்ஸ், மேத்மெடிக்ஸ், கெமிஸ்ட்ரி, மெட்டீரியல்ஸ், பிசிக்ஸ், இன்ஜினியரிங், ஹூமானிட்டீஸ்.




தகுதிகள்: பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் மேத்மெடிக்ஸ் பாடப்பிரிவுகளுடன் பிளஸ் 2வில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. ஐ.ஐ.டி.,ஜே.இ.இ., நீட், கே.வி.பி.ஒய்., உள்ளிட்ட தேசிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதியிருக்க வேண்டும். மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடும் உண்டு.




முதுநிலை பட்டப்படிப்புகள்: 


பிஎச்.டி., - அறிவியல் பிரிவுகள்: அஸ்ட்ரானமி அண்டு அஸ்ட்ரோபிசிக்ஸ், பயோகெமிஸ்ட்ரி, இகோலாஜிக்கல் சயின்சஸ், மெட்டீரியல்ஸ் ரிசர்ச், மேத்மெடிக்ஸ், மைக்ரோபயாலஜி அண்ட் செல் பயாலஜி, மாலிகுளர் பயோபிச்ங்ஸ், மாலிகுளர் ரீபுரொடக்‌ஷன், நியூரோசயின்சஸ், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி,  பிசிக்ஸ் மற்றும் பல்வேறு பிரிவுகள்.




எம்.டெக்., (ரிசர்ச்) அண்டு பிஎச்.டி., - இன்ஜினியரிங் பிரிவுகள்: ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், அட்மாஸ்பெரிக் அண்டு ஓசியானிக் சயின்சஸ், கெமிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆண்டு ஆட்டோமேஷன், எர்த் சயின்சஸ், எல்க்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமெண்டேஷன், மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ், புராடக்ட் டிசைன் அண்ட் மானுபாக்சரிங், சஸ்டெயினபில் டெக்னாலஜிஸ், கம்ப்யூடேஷனல் அண்டு டேட்டா சயின்சஸ் மற்றும் சில பிரிவுகள்.




பிஎச்.டி., பல்துறை பிரிவுகள்: பயோசிஸ்டம்ஸ் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், எனர்ஜி, மேத்மெடிக்கல் சயின்சஸ்,  நானோசயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், வாட்டர் ரிசர்ச், சைபர் பிசிக்கல் சிஸ்டம்ஸ், கிளைமேட் ஜேஜ், பிரைன் அண்டு ஆர்ட்டிபிசிக்கல் இன்டலிஜென்ஸ்.




தகுதிகள்: பாடப்பிரிவிற்கு ஏற்ப, 4 ஆண்டு பொறியியல் அல்லது தொழில்நுட்ப பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு. எம்.எஸ்., எம்.பி.ஏ., உட்பட பல்வேறு துறைகளில் முதுநிலை பட்டப்படிப்பு. மேலும், கேட், நெட், ஜி.பி.ஏ.டி., போன்ற தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி. 




விண்ணப்பிக்க கடைசி நாள்




இளநிலை பட்டப்படிப்புகள்: ஏப்ரல் 4


முதுநிலை பட்டப்படிப்புகள்: மார்ச் 23




விபரங்களுக்கு: https://iisc.ac.in/


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us