கேரள பல்கலையில் அட்மிஷன் | Kalvimalar - News

கேரள பல்கலையில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

திருவனந்தபுரத்தில் செயல்படும் கேரள பல்கலையில் எம்.எஸ்சி., மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


படிப்புகள்: 

* எம்.எஸ்சி.,- என்விரான்மென்டல் சயின்ஸ் 

* பிஎச்.டி., - ஆர்கியாலஜி, பயோ-கெமிஸ்ட்ரி, பயோடெக்னாலஜி, கெமிஸ்ட்ரி, காமர்ஸ், கம்ப்யூட்டேஷனல் பயோலஜி அண்டு பயோ இன்பர்மேடிக்ஸ், என்விரான்மென்டல் சயின்ஸ், மேனேஜ்மெண்ட், மேத்மெடிக்ஸ், மைக்ரோபயோலஜி, பிசிக்ஸ், சைக்காலஜி, தமிழ், ஹிந்தி, மலையாளம் உட்பட பல்வேறு பல்வேறு துறைகள் (பகுதிநேரம் மற்றும் முழுநேர படிப்பு).


தகுதிகள்: 


எம்.எஸ்சி., - என்விரான்மென்டல் சயின்ஸ், பாட்டனி, பயோகெமிஸ்ட்ரி, பயோடெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, லைப் சயின்ஸ், பாரஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி, மைரன் பயாலஜி, இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, என்விரான்மென்டல் மேனேஜ்மெண்ட் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பு.


பிஎச்.டி., - முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 50 மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.


மாணவர் சேர்க்கை முறை: இரண்டு படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். நெட் / ஸ்லெட் /  கேட் அல்லது இதர மத்திய / மாநில உதவித்தொகை பெறுபவர்கள் பிஎச்.டி., படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுதவேண்டிய அவசியமில்லை.


விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 29


விபரங்களுக்கு: https://keralauniversity.ac.in/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us