என்.ஐ.டி.,யில் எம்.பி.ஏ., | Kalvimalar - News

என்.ஐ.டி.,யில் எம்.பி.ஏ.,

எழுத்தின் அளவு :

திருச்சியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தகுதிகள்: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.டி.,/எஸ்.சி., மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். காமன் அட்மிஷன் டெஸ்ட்-2019 தேர்வை எழுதியிருக்க வேண்டும்.


மாணவர் சேர்க்கை முறை: கேட்-2019 தேர்வு மதிப்பெண், குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். சென்னை, டில்லி, ஹைதராபாத், கொல்கத்தா, திருச்சி, மும்பை ஆகிய மையங்களில் குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 14


விண்ணப்பித்தை அஞ்சலில் அனுப்ப கடைசி நாள்: பிப்ரவரி 20


விபரங்களுக்கு: http://nittmbaadmission.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us