ஆராய்ச்சி உதவித்தொகை | Kalvimalar - News

ஆராய்ச்சி உதவித்தொகை

எழுத்தின் அளவு :

தமிழக அரசின் ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் பிஎச்.டி., படிக்கும் தகுதியான மாணவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது.


தகுதிகள்: 

* முதுநிலை பட்டப்படிப்பு அல்லது எம்.பில்., படிப்பை குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்திருக்க வேண்டும். 

* ஏதேனும் ஒரு அரசு அல்லது அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லுரியில் ஜனவரி 2019 முதல் டிசம்பர் 2019 வரையிலான காலத்தில் முழுநேர பிஎச்.டி., படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். 

* வேறு எந்த வகையான நிதி உதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது.


உதவித்தொகை: இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் 120 மாணவர்களுக்கு மாதம் தலா ரூ. 5,000 வழங்கப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை: உரிய விண்ணப்பப் படிவத்தில் கல்லூரி முதல்வரின் கையொப்பம் மற்றும் வழிகாட்டுநரின் பரிந்துரையுடன் ‘கல்லூரி கல்வி இயக்ககம், ஈ.வெ.கி. சம்பத் மாளிகை, கல்லூரி சாலை, செனை - 600006’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: ஜனவரி 31


விபரங்களுக்கு:  www.tndce.in 


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us