கிரேட் உதவித்தொகை 2020 | Kalvimalar - News

கிரேட் உதவித்தொகை 2020

எழுத்தின் அளவு :

இந்திய மாணவர்கள் உதவித்தொகையுடன் பிரிட்டனில் படிக்க சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் யு.கே.,வின் பிரபல கிரேட் ஸ்காலர்ஷிப் -2020 திட்டத்தை பிரிட்டிஷ் கவுன்சில் அறிவித்துள்ளது.



உதவித்தொகை திட்டம்:


இந்த உதவித்தொகையை பெறுவதன் மூலம் யு.கே.வில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்களால் உயர்கல்வியை பெற முடியும். கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இந்த உயர்கல்வி வாய்ப்பை பெறலாம்.



பொதுவான தகுதிகள்:


* இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். உரிய கால அவகாசம் உள்ள இந்திய பாஸ்போர்ட் பெற்றிருப்பது அவசியம். 


* யு.கே.,வில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள அதற்குரிய படிப்பு மற்றும் துறைக்கு ஏற்ப இளநிலை பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும். 


* யு.கே., உயர்கல்வி நிறுவனங்கள் வரையறுத்துள்ள ஆங்கில புலமையை பெற்றிருப்பது அவசியம்.  அதாவது, உரிய ஆங்கில மொழி புலமை பரிசோதனை தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


* இந்த உதவித்தொகை திட்டத்தில் பங்குபெறும் கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் மாணவர் சேர்க்கையை பெற வேண்டும். 


 


குறிப்பு: பங்குபெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ப படிப்புகள், விண்ணப்பிக்கும் தேதிகள், உதவித்தொகைகள் மாறுபடும். 



பங்கு பெறும் கல்வி நிறுவனங்கள்:


* இம்பெரியல் காலேஜ் லண்டன்: யு.கே.,வில் அறிவியல், மருத்துவம், இன்ஜினியரிங் மற்றும் வணிகம் ஆகிய படிப்புகளை வழங்கும் பிரதான கல்வி நிறுவனம். சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இக்கல்வி நிறுவனம் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.



உதவித்தொகை விபரம்: சுமார் 8 லட்சம் ரூபாய்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 6



விபரங்களுக்கு: www.imperial.ac.uk



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us