பிசினஸ் அனலிட்டிக்ஸ் | Kalvimalar - News

பிசினஸ் அனலிட்டிக்ஸ்

எழுத்தின் அளவு :

கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம், ஐ.ஐ.டி.,- காரக்பூர் மற்றும் ஐ.ஐ.எம்.,- கொல்கத்தா கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பி.ஜி.டி.பி.ஏ., படிப்பை வழங்குகின்றன.

படிப்பு: போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் பிசினஸ் அனலட்டிக்ஸ் - 2 ஆண்டுகள். மூன்று கல்வி நிறுவனங்களிலும் குறிப்பிட்ட காலம் கல்வி கற்பதோடு, 6 மாத கால இன்டர்ன்ஷிப் மற்றும் புராஜெக்ட் அடங்கும். இந்த படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்கள் தொடர்ந்து பிஎச்.டி., செய்யவும் தகுதி பெறுகிறார்கள்.

கல்விக் கட்டணம்: ரூ.24 லட்சம். 

தகுதிகள்: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 19

விபரங்களுக்கு: www.isical.ac.in/~pgdba

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us