தமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

தமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககம் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதுநிலை பட்டப்படிப்புகள்: 
எம்.ஏ., - தமிழ், வரலாறு, ஆங்கிலம், தமிழிசை, பரதநாட்டியம், யோகா.
எம்.எஸ்சி.,- புவியியல், கணிதம், உளவியல், தாவரவியல்.
சுற்றுச்சூழல் அறிவியல் (எம்.இவி.எஸ்.,), சமூகப்பணி (எம்.எஸ்.டபிள்யு.,), வணிகவியல் (எம்.காம்.,), வணிக மேலாண்மை (எம்.பி.ஏ.,), நூலகம் மற்றும் தகவலறிவியல் (எம்.எல்.ஐ.எஸ்.,).

முதுநிலை டிப்ளமா படிப்புகள்:
இணையசேவை (பி.ஜி.டி.டபிள்யு.எஸ்.,), வழிகாட்டகல் மற்றும் அறிவுரை பகிர்தல் (பி.ஜி.டி.ஜி.சி.,), யோகா (பி.ஜி.டி.ஒய்.,), வைணவம் (பி.ஜி.டி.வி.,), ஸ்ரீபாஷ்யம் (பி.ஜி.டி.எஸ்.பி.,) மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் (பி.ஜி.டி.சி.ஏ.,).

பட்டயப்படிப்புகள்: யோகா ஆசிரியர் பயிற்சி, மூலிகை அறிவியல், மருத்துவ மூலிகை அழகுக்கலை, கோயில் அர்ச்சகர் பயிற்சி, பேச்சுக்கலை, அக்குப்ஞ்சர், கல்வெட்டியல், சோதிடவியல், கோயிற் கட்டடக்கலை, வரைகலை மற்றும் வண்ணக்கலை, இசை ஆசிரியர் பயிற்சி, பரதநாட்டிய ஆசிரியர் பயிற்சி, பரதநாட்டியம், இசை, கருவி இசை, மதிப்புணர்வு கல்வி மற்றும் ஆன்மீகம், யோகா, நட்டுவாங்கம், மேடை நிகழ்ச்சி தொகுப்பு, சுவடியியல், தமிழ் இலக்கியங்களில் வைணவக்கூறுகள், வைணவ உரைகள், இலக்கிய நோக்கில் திவ்ய பிரபந்தம், ஒப்பிலக்கியம், தேவாரம், திவ்ய பிரபந்தம், ஸ்ரீராமானுஜர்.

இதர படிப்புகள்: பி.எட்., பல்வேறு சான்றிதழ் படிப்புகள் மற்றும் அறிமுக நிலைப் படிப்புகள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 28

விபரங்களுக்கு: www.tamiluniversity.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us