தாய்லாந்து உதவித்தொகை | Kalvimalar - News

தாய்லாந்து உதவித்தொகை

எழுத்தின் அளவு :

தாய்லாந்தில் உள்ள ஏ.ஐ.டி., எனும் தி ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் இந்திய மாணவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் உதவித்தொகைகளை வழங்குகிறது. 




ஹிஸ் மெஜஸ்ட்டி தி கிங்ஸ் ஸ்காலர்ஷிப் பார் டாக்டோரல் புரொகிராம்: 


ஏ.ஐ.டி.,யின் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் மற்றும் ஸ்கூல் ஆப் என்விரான்மென்ட், ரிசோசர்ஸ் அண்டு டெவெலப்மென்ட் வழங்கும் படிப்புகளில் பிஎச்.டி., படிப்பை மேற்கொள்ள விரும்பும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.




உதவித்தொகை விபரம்: 41 மாதங்கள் (7 செமஸ்டர்கள்) வரை தங்குமிடம், கல்விக்கட்டணம், பதிவுக்கட்டணம் மற்றும் இதர செலவுகள்.




ஹிஸ் மெஜெஸ்ட்டி தி கிங்ஸ் ஸ்காலர்ஷிப்ஸ் பார் மாஸ்டர்ஸ் புரொகிராம்: 


ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி மற்றும் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் வழங்கும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் இளநிலை பட்டப்படிப்பை சிறந்த முறையில் நிறைவு செய்த ஆசிய நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.




உதவித்தொகை விபரம்: 22 மாதங்கள் வரை தங்குமிடம், கல்விக்கட்டணம் மற்றும் இதர செலவுகள்.




ஹர் மெஜெஸ்ட்டி தி குவின்ஸ் ஸ்காலர்ஷிப்ஸ் பார் மாஸ்டர்ஸ் புரொகிராம்: 


ஸ்கூல் ஆப் என்விரான்மென்ட், ரிசோசர்ஸ் அண்டு டெவெலப்மென்ட் வழங்கும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் இளநிலை பட்டப்படிப்பை சிறந்த முறையில் நிறைவு செய்த ஆசிய நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.




உதவித்தொகை விபரம்: 22 மாதங்கள் வரை தங்குமிடம், கல்விக்கட்டணம் மற்றும் இதர செலவுகள்.




இந்த உதவித்தொகைகளைப் பெற கல்வியில் சிறந்து விளங்குவதோடு ஆங்கில மொழிப் புலமை பெற்றிருப்பதும் அவசியம். 




விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 29




விபரங்களுக்கு: www.ait.ac.th/admissions/scholarships/royal-thai-government


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us