முதுநிலை டிப்ளமா படிப்பு | Kalvimalar - News

முதுநிலை டிப்ளமா படிப்பு

எழுத்தின் அளவு :

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பிளான்டேஷன் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம், அமெரிக்காவின் விஸ்கான்ஷின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து முதுநிலை டிப்ளமா படிப்பை வழங்குகிறது.

படிப்பு: போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் மேனேஜ்மெண்ட் - புட் புராசசிங்  அண்டு பிசினஸ் மேனேஜ்மெண்ட் ( பி.ஜி.டி.எம்.-எப்.பி.பி.எம்.,)

படிப்புகாலம்: 2 ஆண்டுகள்

தகுதிகள்: புட் டெக்னாலஜி, புட் சயின்ஸ், நியூட்ரிசன், பிசரிஸ், டெய்ரி, அனிமல் ஹஸ்பென்ட்ரி, ஹார்ட்டிகல்ச்சர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில்  50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி.,/மாற்றுத்திறனாளிகள் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. 

மேலும், கேட், மேட், சிமேட், ஏ.டி.எம்.ஏ., ஜி.ஏ.டி.இ., ஆகிய நுழைவுத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதியிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31

விபரங்களுக்கு: http://iipmb.edu.in/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us